Thursday, 17 December 2015

உணர்ச்சிகள் சிறுகதை உணர்வுகள் தொடர்கதை

கோ.சுரேந்திரபாபு.  உதவி ஆணையர் (ஓய்வு);  சென்னை செல்பேசி 9444468670


இன்னும் ஒரு மணிநேரம் தாங்குவாரா தெரியவில்லை.உயிர் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கிறது. மூச்சு அலை உள்ளே செல்வதும் வெளியே வருவதும் தெரியவில்லை. ஆனால் சுவாசம் நிகழ்கிறது, இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது.  அவருடைய மகன் அமரிக்காவிலிருந்து வர வேண்டியுள்ளது. அவருக்கென்று இருக்கும் உறவு மகன் ஒருவன் மட்டும்தான். மனைவியை இழந்து சிலஆண்டுகள் கடந்துவிட்டது.

                                
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifgAWwj4ooo3K76fYkRw5gQpVawithgaV1O8xyBoSAoFXRmueq255HtmvZz1T06c_NOBpmeuz8Bj7wsgQUlOc21qvtmCW5_Um0QjMCcHqmiO7EUW38DmhuGKXVcNJ-z3Giq_j2WJJrMRrH/s1600/death+bed+artist.jpg
 மனைவியை இழந்த ஆண்கள் எப்படி சீக்கிரமாய் சரிந்துவிடுகிறார்கள் என்பதற்கு இப்போது மூச்சை மட்டும் வைத்துக்கொண்டிருக்கும் சந்திரபாசு ஒரு நல்ல உதாரணம்.

.கருணை இல்லத்தில், அமரிக்காவில் வாழும் மகனால் சேர்க்கப்பட்ட ஒரு தகப்பன் சந்திரபாசு. தூரிகையில் வண்ணங்களை தோய்த்து ஓவியங்களுக்கு உயிர் கொடுத்தவர். நிறங்களுக்கு மொழி வடிவம் தந்து பேசவைத்தவர். அந்த விரல்கள் இன்று அசைவை இழந்து அடங்கிக் கிடக்கிறது. பாசுவின் ஓவியங்கள் வியப்பை தந்துள்ளன. மனத்தொய்வும் மனஅழுத்தமும் மிகுந்த மனிதன் வீட்டில் வண்ண வண்ண வளர்ப்பு மீன்கள் அசைந்து ஓடுவதை கண்டதும் மன அமைதி பெறுவதைப்போல, அசையா நிலையில் உள்ள இவரது வண்ண ஓவியங்கள், துவண்டு போன மனநிலையை மாற்றி மன எழுற்சி தரும் சக்தி கொண்டிருந்தது. இவரது விரல் நுனியில் பிடிபட்ட தூரிகைகளின் வழியாக வடிந்த நிறங்களுக்கு உணர்ச்சி மொழியில் பேச தெரிந்து இருந்தது. மனநலம் குன்றிய குழந்தைகளிடம் காட்டிய போது அவர்கள் முகத்தில் மலர்ச்சி பூத்தது. அந்த குழந்தைகளின் மனவளர்ச்சியை மேம்படுத்தும் மருத்துவ சக்திவாய்ந்த  விசித்திர  ஓவியங்களாக அவரது வண்ண ஓவியங்கள் மதிக்கப்பட்ட ஓவியங்களை வரைந்தவரின் விரல்கள் இனி ஓவியம் வரையாது. உரைந்து நின்று விட்டதுஉயிர் துடிப்போடு அனாதை சடலமாக அவர் கிடந்தார்.

சந்திரபாசுவை பற்றி முழுதும் தெரிந்தவர்கள் கூட அந்த அறையை விட்டு நகர்ந்துவிட்டார்கள்.அந்த கருணை இல்லத்தில் கடைசியாக வந்து சேர்ந்த உமா மட்டும் அமைதியான சிலையாக நின்றிருந்தாள். அவள் உடலில் இதயம் மட்டும்  கனமாக இயங்குவதாக  உணர்ந்தாள். பாசுவின் அருகில் நகர்ந்தாள். அவரது அதிசய விரல்களை தொட்டுப்பார்க்க மனம் ஏங்கியது.

 அந்த அறையில் யாரும் இல்லை. மூடியநிலையில் இருந்த கை விரல்களை உற்று கவனித்தாள்.அவரது பூப்போன்ற கரத்தை தன்விரல்களை பதித்து தடவினாள்.
மனதிற்குள் ஆத்மார்த்தமான ஓர்  ஆசையும் பற்றுதலும் அவளுக்கு ஏற்பட்டது.

 இவருக்கு ஏதாவது பணிவிடை செய்யும் புனிதமான வாய்ப்பும் மனநிறைவும் கிடைக்குமா என்ற ஏக்கம் எழுந்தது. அந்த மாமனிதருக்கு பணிவிடை செய்ய தனக்கு தகுதி இருக்குமா, என மனதுள் புழுங்கினாள். அந்த கருணை இல்லத்தில் அவரைப்போலவே தானும் உறவுகள் இருந்தும் அனாதையானவளாக ஒண்டவந்தவள் தானே என்று வருந்தினாள்.

உமா திருமணமானவள்அவளது கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதால் இளமையில் விதவைக்கோலம் ஏற்றவள்மகளை லண்டனில் படிக்க  அனுப்பிவிட்டு அவர் உலகைவிட்டுப் போய்விட்டார். மக்கள் புழக்கம் இருக்கும் இடத்தில் தங்குவது பாதுகாப்பானது என்று மகளோடு பேசி பின்னர், இந்த கருணை இல்லத்தில் பணிப்பெண்ணாகவும் யாரும் இல்லாத அனாதையாகவும் அங்கேயே  அடைக்கலம் தேடிக்கொண்டாள்.

அம்மா உங்களை அய்யா கூப்பிட்டார்’’ என்று கருணை இல்லத்தில் நீண்ட காலம் வேலை செய்யும் தாயம்மா கூறிவிட்டு சென்றார்.

மன அழுத்தத்துடன் உமா நகர்ந்தாள். கருணை இல்லத்தின் தாளாளர் சுதாகரனை மட்டும் எல்லோரும் அய்யா என்றுதான் அழைப்பார்கள்.அந்த கருணை இல்லத்தின் நிறுவனர் மற்றும் காப்பாளர் எல்லாம் அவர்தான். அவருக்கும் யாரும் இல்லை. மனைவி அவரை விட்டுவிட்டு வேறு ஒருவனோடு போய்விட்டாள். அவரும் அந்த கருணை இல்லத்தில் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் பரிகொடுத்துவிட்டு ஏக்கங்களுடன் வாழும் சுதந்திர அனாதை.

பாசுவின் நிலையை பார்த்த பின்னர் சுஷ்மாவின் மனதில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது அது உமாவுக்கு தெரிந்தது.

சுதாகரனின் அறையின் வாசலில் நின்றாள். உள்ளே வா....எதுக்காக நிற்கணும் ?சுதாகரன் மென்மையாக குரல் கொடுத்தார். மெல்ல உள்ளே அடி எடுத்து வைத்தாள் உமா.

இன்னிக்கு, ஒரு நல்ல செய்தி வந்திருக்கு. பாரீசிலிருந்து, மேத்திவ் கன்சால்வஸ் , உங்கள் சேவைகளைப் பாராட்டி கடிதம் எழுதி இருக்காங்க. கருணை இல்லத்திற்கு நிதியும் அனுப்பி இருக்காங்க. பதில் பேசாமல் சுதாகரன் கொடுத்த கடிதத்தை வாங்கி படித்துவிட்டு  சுதாகரனின் மேசையில் வைத்துவிட்டாள்.  அவள் முகம் வாடியிருந்தது.

ஒரு மாத்திற்கு முன்னர் ஏற்பட்ட அந்த சங்கடமும் சலனங்களும் உமாவின் ஆழ்மனதில் நிரந்தர புண்ணாகி அழுத்தமான காயச் சுவட்டை ஏற்படுத்தி இருந்தது.

வெளிநாட்டு தம்பதிகள் கருணை இல்லத்தை பார்வையிட வருகிறார்கள் என்றதும் எல்லோரும் அக்கரையோடும் ஆர்வத்துடனும் வேலை பார்த்தார்கள். இல்லத்தின் உரிமையாளர் என்ற எண்ணம் இல்லாமல் சுதாகர் சாக்கடைகளை கூட தானே சுத்தம் செய்த சம்பவம் சுஷ்மாவுக்கு அவர் மேல் மதிப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திவிட்டது. வேலை செய்து களைத்துப்போனவர் அமர்ந்து பெருமூச்சுவிட்டார்.

அவரவர் வேலைகளை முடித்துவிட்டு நிறைவோடு ஓய்வு எடுக்க அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்.
இந்த அறையில் தான் அவர்கள் தங்க வேண்டும். இந்த கட்டில் பீரோ மேசை எல்லாவற்றையும் இடம் மாற்றி வைக்கவேண்டும் சுதாகர் சொல்ல சுஷ்மா அறையை பெருக்க தொடங்கிவிட்டாள். இயல்பாகவே சேவை மனப்பான்மை அவள் உடலில்கலந்திருந்தத
                                                          https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmirUE1WvnIIlSEj1xIBC1lz6d5IInE8SJVFksPVm0s2fXwUBCJA11BtDzxbfYyv5JnjHT20-GXBnpmz8vW_2YvaztDVyhOOtjskAb-WgTaLdSOnK2ETc9NiJvdbdFAxTSHP6glCHiJRa6/s1600/man+working.jpg
 சுதாகர் ஏணியில் ஏறி ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது ஏணி சரிய ஆரம்பித்தது, உமா ஓடிப்போய் ஏணியை தடுத்து பிடித்துக்கொண்டாள். மெதுவாக சுதாகர் ஏணியிலிருந்து இறங்கிவந்தார் கடைசி படியில் கால் தடுமாறி விட்டது உமாவின் தொள்பட்டையை தாங்கிப் பற்றிக்கொண்டதால் கீழே விழாமல் சமாளித்தார். ஐம்பதாவது வயதை நெருங்கிவிட்ட சுதாகருக்கு உடல் தடுமாறுவது இயற்கைதான். கொஞ்ச நேரம் உட்காருங்கள் நான் செய்கிறேன்  என்று உமா அங்கிருந்து மேசையை நகர்த்தினாள். அவரும் மற்ற வேலைகளை செய்ய தொடங்கியதும் ஒருவர்மேல் ஒருவர் இடிபடும் நிகழ்வுகள் நடந்தன. இருவரும் அதை பொருட்படுத்தவில்லை.
மேசையை நகர்த்தும் போதுதான் உமா, சுதாகரின் உள்ளே பாலியல் தாகம் தளும்பும் இன்னோர் மனிதனை உணர்ந்துகொண்டாள். அது அவளுக்குஅதிர்ச்சி தரவில்லை.அது இயற்கையில் மனித இயல்பு என்று சமரசம் செய்துகோண்டாள்.
மேசையை நகர்த்திய போது அது கனமாக இருந்ததால் அதில் அவரும் சேர்ந்து இழுக்க வேண்டியதாயிற்று.                 
கையை மடித்து இழுத்த போது சுதாகரனின் வலது கையின் மூட்டு அவளது மார்பகத்தில் முட்டி அழுத்தி உரசியது. கணத்துளியில் உமாவின் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல தடுமாறி மீண்டாள். மின்னல் வீச்சில் அவள் கண்கள், சுதாகர் முகத்தை பார்த்து திரும்பியது. சுதாகர் கண்கள் மேசையை பிடிப்பதில் மட்டும் கவனமாக இருந்தது.
விபத்திலிருந்து தப்பித்தவள் போல தடுமாற்றத்துடன் வேலையை தொடர்ந்தாள். தவறுதலாக நிகழ்வதுபோல தப்பான உரசல்கள் நிகழ்ந்தன. சுஷ்மாவுக்கு இன்றுதான் முழுமையாக புரிந்துவிட்டது. சுதாகரனைப்பற்றி அல்ல. தன்னைப்பற்றி தானே இன்றுதான் புரிந்துகொண்டாள
தனக்குள்ளும் இப்படி ஒரு இரகசிய தாகம் உள்ளுக்குள்ளேயே ஊறிக்கொண்டிருக்கிறது. சுதாகரனின் ஒவ்வொரு தொடுதலிலும் உரசல்களிலும் ஒரு மின்கதிர்வீச்சு தன் நாடிதுடிப்பை இதமாக தூண்டி பரவசப்படுத்தியதை உணர்ந்தாள். அதை தடுக்க மனம் வரவில்லை இரகசிய சுகமாக அனுமதித்தாள்.
தவறுதலாக நடந்துவிட்டது என்று சமாதானப்படுத்திக் கொண்டு இயற்கையான ஒரு செயலை குற்ற உணர்வோடு அந்த நிமிடங்களை சரிசமமாக இருவரும் பங்குபோட்டுக்கொண்டனர்.
      
இரவை கடந்து, வழக்கம் போல கருணை இல்லத்தின் அதிகாலை வெளிச்சமாக விடிந்தது. எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். உமாவின் கண்கள் வீங்கி இருந்தது. இரவு முழுவது உடல் களைப்பால் தளர்ந்து தொய்ந்த உடலுக்குள்  பிணமாக தூங்கி கிடந்தாள்.
எது நிகழக்கூடாது என்று அந்த கருணை இல்லத்தில் மகள் சேர்த்துவிட்டுச் சென்றாளோ அதை நானே வாரி எடுத்துக் கொண்டேனே. எச்சில் சோறு தின்ற பிச்சைக்காரி போல மனது அவமானப்பட்டது. புகை மூட்டமாக பரவிய அந்த மோக மயக்கம் அந்த சம்பவ நிமிடங்கள் கடந்தவுடன் காற்றோடு காற்றாக மறைந்துவிட்டது. உள்ளே இருந்த மனச்சாட்சி ஆறாத காயத்தை ஏற்படுத்தி தாங்க முடியாத மனவலியை தந்தது.
 இனி இப்படிப்பட்ட குற்றத்தனமான இரகசிய சுகம் தொடர போகிறதா. இந்தக் கேள்விக்குறி அவளை கொத்தி தின்றது. சில நிமிடங்களில் நிகழ்ந்துவிட்ட சலன சம்பவம் நிரந்தர தடயமாக மனக்காயத்தை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்து அவமானப்பட்டாள்,அவதிப்பட்டாள்.ஆழ்மனதில் சிந்திக்க முயன்றாள்

 நான் என்னவாக மாறவேண்டும் ?தூக்கத்தை இழந்தவளாக இரவெல்லாம் நிற்பதும் நடப்பதுமாக பல இரவுகளை கழித்தாள
                                                            https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdD1uPanFCGrijpeXze6YJXTPuxYItD9-dABXRQq2b2t03YKeZn73a6Sj5Rg9vJl9KvdVOIEgazoORsYwIEi275H4f_jcK0DxGsrtFmKGNspxNBCouIg1iIVcbxkLLtt53K0ImyLH4oLaD/s1600/woman+stand+thining.jpg

இப்போது பாசுவையும் அவர் வரைந்த ஓவியங்களையும் பார்த்தப்பின்னர், இன்று எதுவோ ஒன்று புதியதாய் மனதில் புது வழி தென்படுவதாக உணர்ந்தாள்..

சந்திரபாசுவின் ஓவியத்தின் அற்புதங்களை உயிர்ப்பிக்க அவரை மீண்டும் மனிதனாக எழும்படி செய்ய முடியுமா ? அதற்கு என் மனமும் உடலும் புனிதமான பணியாக எதையாவது செய்யுமா ? என்ற ஏக்கம் அவளுக்கு ஏதோ ஒரு புதிய பாதையை காட்டுவதாக மனதிற்குள் உணர்ந்தாள். அப்போதுதான் சுதாகர் தன்னை அழைப்பதாக தாயம்மா கூறினாள்.

உமா !  பாசுவின் உடல்நிலை பாதுகாக்க தனியாக ஒரு உதவியாள் தேவைப்படுகிறது என்ற மாத்திரத்தில் உமாவின் முகம் பவுர்ணமி நிலவானது, நான் செய்கிறேனே என்று கொளுத்திய மத்தாப்பு அழகுடன் வெளிப்படுத்திவிட்டாள்

சுதாகர் தனது குற்றத்தை உள்ளூர உணர்ந்துகொண்டவனாக தலையை குனிந்தபடி அமர்ந்தான்.. நான் உன் உடலின் சதைகளையும் நரம்புகளையல்லவா ஆக்கிரமித்தேன். ஆனால் சந்திரபாசு தன் உயிர் ஓவியங்களால் உன் இதயத்தை அல்லவா வென்றுள்ளார். ஒப்புக் கொண்டார். சுதாகரன் மனதில் இருந்த மோக மங்கை விதவையானாள்
    நீ இன்னியிலிருந்தே உன் வேலையை தொடங்கலாம். சுதாகர் கருணை இல்லத்தின் தாளாளராக பிரகாசித்தார்.
உமாவின் மென்மையான தொடுதல்கள், பராமரிப்பு சேவைகள் பாசுவின் உடல் இயக்கத்தை மாற்றின. ஆண் , பெண் இரு பாலாரின் தொடுசெயல், உடலில் பல ஹார்மோன் சுரப்புகளை பக்குவப்படுத்துகிறது.
தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போதும் கணவனுக்கு உடல் தொட்டு பணிவிடை செய்யும்போதும் அக்கா, தம்பிக்கு சோறு ஊட்டும்போதும் காதலனும் காதலியும் கைகள் தொட்டு பேசிக்கொள்ளும் போதும் பொது வாழ்வில் ஈடுபடும் ஆண் பெண் இருவரும்  கைகுலுக்கும் போதும் ஏற்படும் உணர்வியலோடு ஏற்படும் உடற்கூறு இயங்கியலின் மாற்றங்கள் உன்னதமானவை. .சந்திரபாசுவின் கடந்த காலத்தின் வரண்ட வாழ்வின் நினைவுகளையும் தனிமை சுமையையும் நீக்கி உமாவின் தோழமையான பேச்சும் புன்சிரிப்பு உரையாடல்களும் அவரை முற்றிலுமாக மாற்றியத

                                                                 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpLvhP7LAPQwkKJyCSXU-tGKzbpMRX-bx5j-iZXlDKKbCGBkjTqCP2aRlj6cqvnsDLTbhv6jOHpUa8mlXJuU0lBTn21_ge0rNQ9L-JMYcOhAinnBuX2ZGx835-QeB-B1GQzaUKXWqJwgap/s1600/man+painting+sill.jpg

சந்திரபாசுவின் விரல்கள் மீண்டும் உயிர் பெற்றன ஓவியங்களை படைத்தன.
அவர் நடக்கும்போதும், நிற்கும்போதும் கைத்தாங்கலாக உடன் நடந்தாள்.
                          
           தனது மரணத்தின் நேரத்தை நிச்சயிக்கப்பட்ட பிறகும் நம்பிக்கையோடு தன்னை மீண்டும் உயிரோட்டமுடன் இயங்கவைத்த உமா, தனது மறுபிறப்பின் தாய் என்று சந்திரபாசு பெருமைப்பட்டார். இன்று அவர் மீண்டும் ஓவியங்களை வரைந்தார்.பல இடங்களில் கண்காட்சியில் இவரது ஓவியங்கள் இவரது பெருமையை உயர்த்தி
      பிரச்சினைகள் வரும்போது தெளிவுடன் உரையாடினாள்.சில சமயம் பேசாமல் மௌனங்களாலேயே தன் கருத்தினை வெளிப்படுத்தினாள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUUGX2uUyDxCJs1wLMwmZz81SoqM1Z_TY3LeORKdxXVaEg6lKZvXSc1errrLWiyBa2wKGKfYwC6NaHwHFBGKHO2gmdLyp0k3uUjNRvFleejKs17TL5aL_lZHkmzNMvqg7DmW5QdRmvi_3x/s1600/walking+paie+sil.jpg

அறிவுப்பூர்வமான பேசும் போது  நட்பு ணர்வோடு  துணையாக நடந்தாள்.
.அது அவரின் மனநிலையில் பெரிய அளவில் அதிசய மாற்றத்தை ஏற்படுத்தியது

குற்றக்குழியிலிருந்து வெளியேறி மகத்தான சாதனையை வாழ்வில் சாதித்துவிட்டோம் என பூரித்து மகிழ்ந்தாள் உமா. நேடுநேரம் ஆகியும் மகிழ்வால் தூக்கம் வரவில்லை .நள்ளிரவில் தொலைபேசி மணி அடித்த போதுதான் தன் மகள்  பற்றிய நினைப்பு வந்தது அழைப்பு மகளிடமிருந்துதான்.மிக பூரிப்போடு மகள் பேசினாள். ‘’அம்மா, நான் காலையே உனக்கு போன் போட்டேன், நீ ஏடுக்கவில்லை. சுதாகர் சார் என்னிடம் நிறைய பேசினார் உங்களைப்பற்றி பல விவரங்களை சொன்னார்.உங்களுடைய எதிர்காலம் பற்றி முடிவு எடுக்க வேண்டும் அதற்காகவே நான் இந்தியா வர வேண்டும் ‘’ .
மகிழ்ச்சியால் தூக்கம் இல்லை என்றவள் இப்போது குழப்பத்தில் தூக்கம்  தொலைத்துவிட்டு புரண்டாள். காலை விழிக்கும் போது நேரம் கடந்துவிட்டிருந்தது. அறையை விட்டு வெளியே வந்தாள் பாசுவும் சுதாகரும் எதைபற்றியோ பேசிக் கொண்டிருந்தார்கள்.உமாவுக்கு இன்னும் கலக்கமாக ஆனது. கொஞ்ச நேரத்தில் வக்கீல் ராமநாதன் அவர்களோடு சேர்ந்து கொண்டு வாதம் செய்தார். மிகவும் கலங்கிப்போன நிலையிலிருந்து மீள்வதற்குள் மகள் பெட்டியோடு வந்த கட்டி அணைத்தாள்.
      நடந்தவற்றையே நினைத்து கலங்குவதை விட நீங்கள்  திருமணம் செய்து கொள்ளவதுதான் சரியான முடிவாக இருக்கும்.அதுதான் உங்கள் மகளின் விருப்பமும் கூட. அவள் சொல்லித்தான் நான் வந்தேன் என்றார் வக்கீல் ராமநாதன்.
மௌனத்தால் தான் எதையும் பேச விரும்பவில்லை என மறுப்பை வெளிப்படுத்தினாள்
     பாசு நல்ல நிலைக்கு வந்துவிட்டார் உமா மூட்டு வலியால் அவதிப்பட்டாள்
 பாசுவின் தோள்பட்டையில் கையை பற்றிக்கொண்டு தாங்கித்தாங்கி நகர்ந்தாள்.அந்த வலி அவளுக்கு பெருமையான சுகமாக உணர்ந்தாள் உமாவின் உடலின் பாரத்தை தன் தோளில் தாங்கிப்பிடித்துக்கொண்டு பாசு மெல்ல, மெல்ல படிகளில் இறக்கி சக்கர நாற்காலியில் அமர்த்தி அழைத்து சென்றார்.

                                                                   https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuhGIwdMZxpQb8jER7qTnybksyNhxFNGv6w_-rFZgDVHnpATLhYw6wD6aVrPIDq3A2XrUu0YOeOwKUEFm58ClaaHgY1RligVjRocYZy-z0o2jRHbVT02Uy4QHGqq54bqX-3tnwR8sfe-jQ/s1600/wheel+chair+lady.jpg
வக்கீல் ராமநாதன்  வற்புறுத்தியும் சுஷ்மா திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை. .மனமொத்து உதவிக்கரங்களை கோர்த்துக் கொள்ளவும், பரஸ்பர அன்பையும் பாசத்தையும் பரிமாரிக்கொள்ளவும்,நம்பிக்கை போதுமானது.                       புணர்ச்சிசுகத்தில் பிள்ளைபெறவும் சொத்துரிமைக்காகவும்  கணவன் மனைவி என்ற திருமண உறவுமுறையும் சடங்குகளும், பதிவும் பத்திரங்களும் தேவைப்படலாம்.
 கணவன் மனைவி உறவைத்தவிர, ஆணும் பெண்ணும் இணைந்து சாதிக்க உரிமையும் சாத்தியமும் இல்லையா ? இந்த கேள்விகளுக்கு சரியான பதிலை தனிமைப்படுத்தப்பட்ட அந்த முதிர்ந்த ஜோடிகள் நிரூபித்து  செயலில் காட்டினார்கள்.

 நாம் நமக்காக வாழவில்லை,  சமூகநலனுக்கான பணியில்  இணைந்து   வாழ்பவர்களுக்கு உடலின் நோய் தெரியவில்லை. மனதின் களங்கமும் கண்ணில் படுவதில்லை.
பாசுவும் சுஷ்மாவும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி நடந்து  கொண்டிருக்கிறார்கள், யாருடைய கருத்தைப் பற்றியும் கவலைப்படாமல்.
        

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6zBUdBe4pPrwUyvlzWPhQmRX9O_SoOWCKKxtcCI-2A3Zo26pB61oKsoxe1UAcP2UX9oDekAy2g52qseR7nc3q7oC-naL5692lE8rAyOX5Uqdo-O__Fqb6flY7eBaGBVnVbwzbY_GX3Knl/s1600/final+walk.jpg
         


கோ.சுரேந்திரபாபு ,உதவி ஆணையர் (ஓய்வு)சென்னை.  செல்பேசி 9444468670