Tuesday, 16 February 2016

விசாரணை திரைப்படம்

விசாரணை திரைப்படம் பார்த்தேன்.நமது நாட்டின் அரசு இயந்திரத்தின் ஒரு பாகமான காவல் துறையின் கட்டமைப்பு எந்த அளவுக்கு அழுகிப்போய் உள்ளது என்பது நிர்வாணப்படுத்திக்காட்டும் அரிய படம் இது.
காவல் துறை மட்டுமல்லாமல் நீதித்துறை பொது நிர்வாக கட்டமைப்பு அனைத்தும் பழுது பார்க்க முடியாத அளவுக்கு சீர்குலைந்து உள்ளது.அதில் அரசியல்வாதிகளும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் பிடிக்கு உட்பட்டுவிடுவார்கள் என்பதே உண்மை.
அந்த சமூக அமைப்புக்கான தூண்களில் ஒன்றான அரசு நிர்வாக அமைப்பின் தன்மையை மக்களுக்கு புரிய வைக்காமல், ஐந்து ஆண்டுகள் மட்டும் இருக்கம் அரசியல் வாதிகளின் தனிமனித ஊழல் மற்றும் ஒழுக்கமின்மை பற்றி விமர்சிப்பது மட்டும் அரசியல் ஆகாது என கருதுகிறேன்.
இப்படிப்பட்ட சீர்குலைந்து உள்ள அரசு அமைப்பில் நேர்மையான அதிகாரிகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் நேர்மையான அரசியல் கட்சிகள் கூட நிர்வாகம் பண்ண முடியாது.அந்த அளவுக்கு நிர்வாக அமைப்பு சீர்குலைவு நடைமுறைக்கு உள்ளாகிவிட்டது.
நேர்மையான அதிகாரிகளுக்கு எந்தஅரசியல் கட்சியும் உதவியும், பின்பலமும் அளிப்பதில்லை. அதை போலவே நல்ல கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விழிப்புணர்வு இல்லாத மக்கள் அந்த கட்சிக்கு ஆதராக இருக்கப்போவதில்லை. .உண்மையில் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டிய இந்த சமூக அமைப்பின் உண்மையான லட்சணத்தைப்பற்றிய விழிப்புணர்வு என்ன என்பதை இப்படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம,

Monday, 15 February 2016

காதலர்ககளின் ஜோடி பொருத்தம்

காதலர்ககளின் ஜோடி பொருத்தம் முறிந்துபோவது எதனால் ?’ உங்கள் துணைவர் பொருத்தமானவராக்கி கொள்வது எப்படி ? பொருத்தமான துணை அமைந்துள்ளதா எப்படி சொதிக்கலாம் ?
ஒன்றின் மேல் மறுறொன்று பற்றுதல் ஏற்பட்டு அதை அடைவதற்கான வேகம் இருப்பதே காதல் என பலர் நினைக்கிறார்கள்.உண்மையான காதல் என்பது பற்றுதலுடன் ஈர்ப்பு சக்தி உள்ளதே காதல்.இப்படியும் கருத்துள்ளது
ஆண் பெண் இடையே மட்டும் காதல் வருவதற்கு காரணம் இயற்கையிலேயே பாலியல் ஈர்ப்பு இருப்பதுடன் அடுத்தவரிடம் உள்ள ஏதேனும் ஒன்றில் பற்று ஏற்பட்டால் அது காதலாக கருத்தப்படுகிறது.
காதலுக்கு பாலியல் ஈர்ப்பைக் கடந்து வேறுவகை ஈர்ப்பும் இருந்தாக வேண்டும்..பற்றுதல் என்பது பொருள் சார்ந்த, உணர்வு சார்ந்த இரண்டு வகை ஈர்ப்பு நடைமுறையில் மதிக்கப்படுகிறது.
காதலர்கள் பரிசுப்பொருட்களை கொடுப்பதும் பெறுவதும் அகமகிழ்வு தரும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் போதும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் எற்படும் என் நம்புகிறோம்.
காதலில் தோல்வி என்பது சமூக சூழலின் நெருக்கடியால் ஏற்படுவது முறிவு என்பது காதலர்களிடைய ஏற்படும் ஒத்துப்போகாத முரண்பாடுகளால் ஏற்படுவது.
ஒரு காதலன் தன் காதலி தாமதமாக வந்தவுடன் அவளுக்கு தன்மேல் ஏதோ வருத்தம் உள்ளதாக கருதி அதனை சமநிலைப்படுத்த கடைக்கு அழைத்து சென்று விலை உயர்ந்த ஒரு பரிசுப்பொருளை வாங்கிக் கொடுப்பான்.அது காதலை நிலைநாட்டுவதாக அவன் கருதுகிறான்.உண்மையில் அந்த பெண் தன் தந்தையார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனம் சோர்ந்து வந்திருப்பாள். அவளுக்கு உணர்வுபூர்வமான தேவையும் ஈர்ப்பும் அவளுக்கு இருக்கும்.அதை புரிதல் இல்லாத அந்த காதலன் எந்த பொருளை கொடுத்தாலும் அதில் அவளுக்கு பொருளில் ஈர்ப்பு ஏற்படாது.
அவள் பசியோடும் வரண்டு தாகத்தோடு வந்திருக்கலாம் அந்த தருணத்தில் அவளுக்கு குடிக்க தேநீர் கொடுத்தால் அவளுக்கு அந்த பொருளின்பால் ஈர்ப்பு தாகம் இருப்பதால் அவனது பகிர்வு அவள் மனதில் அவன் பால் காதல் ஏற்படுத்தும்.
எந்த பொருளில் ஒருவருக்கு ஈர்ப்பு இருக்கிறதோ அந்த பொருளை அவரது மனம் தேடும். அப்பொருளை அளிப்பவர்மேல் காதல் ஏற்படுகிறது.அதே போல் மனம் துவண்டு உள்ள தருணத்தில் கனிவான பேச்சுக்கும் ஆறுதலுக்காகவும் மனம் ஏங்கும் அப்போது பொருள் தரக்கூடாது உணர்வுகளால் பகிர்தல் நிகழ வேண்டும்.
பொருள் மற்றும் உணர்வு என இரண்டு வகையில் காதல் பாதுகாக்கப்படுவது நடைமுறையில் பல தோல்விகளையும் முறிவுகளையும் சந்திக்கிறது.
மூன்றாவதாக சிந்தனை மற்றும் செயல் ஒருமைப்பாட்டில் ஏற்படும் காதல் உண்மையானது. முழு பலனும் வெற்றியும் சுகமும் தரக்கூடியது. அந்த காதல் மட்டுமே நிலைத்து நிற்கிறது.
உங்கள் காதல் பற்றி ஒரு சோதனை செய்து பாருங்கள் இது உளவியல் அறிவியல் சோதனை.
வாய் குறுகலான ஒரு பாட்டிலை உங்கள் கையில் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் துணைவரை இன்னொரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு உங்களிடம் உள்ள பாட்டிலுக்குள் நிதானத்தோடு கவனக்குவிப்போடு ஊற்ற வேண்டும். முடித்த பின்னர் அவர் பாட்டிலை பிடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் நீரை ஊற்றுங்கள். இந்த பயிற்சியை செய்யுங்கள் மனக்குவிப்பு மற்றும் கவனச் சிதறல் இல்லாத செயல் ஒத்துழைப்பு நிகழும். இதனால் நல்ல உறவும் காதலும் குடும்பத்தில் ஏற்படும். அன்றாட வேலைகளில் ஒருவர் செயலில் இன்னோருவர் பொருத்தமான எதிர்நிலையை (கோடுப்பது பெறுவது ) என வேலையை பகிர்ந்து செய்வது மன ஒற்றுமையின் அடையாளம்
நிஜ வாழ்வில் இன்னொருவரோடு நமது எண்ணத்தாலும் செயல்களாலும் ஒருமித்து படைப்பில் ஈடுபடும் போது ஏற்படுவதே பொருத்தமான, நிலையான காதல். இதைத்தான் நம் முன்னோர்கள் திருமணம் முடித்தவுடன் சில மாதங்களில் பெண்ணின் வயிற்றை தொட்டு ஏதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்பார்கள்..ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் மிக உயர்ந்த படைப்பில் ஒருமைப்பாட்டு நிலை பாலுறவு என்பது உண்மை.
எண்ணங்களில் பலரோடு பலருக்கு ஒற்றுமை இருக்கும். .ஆனால் அதை செய்லபடுத்தும்போது ஒருவரோடு அடுத்தவர் ஒத்திசைவோடு செயல்பட முடியாது. யார் யாருடன் எண்ணத்தாலும் செயலாலும் ஒருங்கிணைந்து பொருந்திக்கொண்டு செயல்பட முடியுமோ அவர்களே பொருத்தமான ஜோடி..