Tuesday, 17 November 2015

Rescue operation in Flood by Mr.C.Sylendra Babu(ADGP) | Chennai flood




சமூக அரசியல் சினிமா என மதிக்கத்தக்க ஆவணப்படம்



மாற்றுத்திரைப்படத்திற்கு நிகரான ஆவணப்படம்



             ஆவணப்படத்திற்காகவே முழமையாக உருவக்கப்பட்ட பதிவு

https://youtu.be/u2J4sEreedU

Friday, 13 November 2015

14-11-2015 இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும்



இன்று உலக சர்க்கரை தினம்.. சர்க்கரை இனிப்பானதுதான் அதில் உள்ள கசப்புகளை படிக்கலாம்.


உணவகத்தில், காபி டீ குடிக்கும் போது வித்தவுட் சுகர் என கேட்பது நடைமுறையாகிவிட்டது. தலைமுறை தலைமுறையாக சர்க்கரை கலந்த தேநீரும், காபியும் குடித்துவந்த நமது சமூகத்தில்  அந்த ‘வித் அவுட்’ கலாச்சாரம் எப்படி வந்தது? சர்க்கரைசக்தி உடலில் என்னதான் செய்கிறது ?


தினசரி நாம் உழைக்கவும் வேலைகள் செய்யவும் உடலின் செல்களுக்கும் திசுக்களுக்கும் சக்தி தருவது உணவில் உள்ள சர்க்கரை சக்தி ஆகும். .

எப்படிப்பட்ட வேலையை உடல் உறுப்புகளுக்கு தர இருக்கிறோம் என மனதில் தீர்மானித்ததும் அதற்கேற்ற அளவு சர்க்கரை சக்தியை நாம் உண்ணும் உணவிலிருந்து செரிமான உறுப்புகள் எடுத்துக் கொள்கின்றன.

உணவிலுள்ள சர்க்கரை சக்தியை கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலீன் அதன் தன்மையை மாற்றி செல்களுக்குள் அனுப்புகிறது.

செல்களுக்கும் திசுக்களுக்கும் வேலை கொடுக்காமல் சர்க்கரை சக்தியை உள்ளே அனுப்பினால் அதை செல்கள் ஏற்றுக்கொள்வதில்லை. கணையமும் உயிர்சர்க்கரையாக மாற்றி செல்களில் சேர்ப்பதில்லை.  செல்களுக்குள் செல்லாத சர்க்கரை இரத்தத்தில் தங்கிவிடும். அப்போது நாம் சர்க்கரை நோயாளியாகிறோம்.
.
உபரியாக தங்கிய சர்க்கரை சக்தியில் ஒரு பகுதியை நமது ஈரல் சேமித்து வைக்கும்.  நெருக்கடி கட்டத்தில்  அந்த சக்தியை திருப்பித்தரும் .                                                                                             
நிதானமாக வீதியில் நடந்து செல்லும ஒருவருக்கு கால்கள் வலிப்பாதாக உணரலாம். ஆனால் அவரை திடீரென்று ஒரு வெறிநாய்  துரத்தினால் அவரே வேகமாக ஓட்டம் பிடிப்பார். அவருக்கு அந்த திடீர் சக்தி எப்படி வருகின்றது. அதுதான்  ஈரலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சர்க்கரை சக்தியை ஈரல் வெளிப்படுத்தி நமது உடலுக்கு கூடுதல்  சக்தியை தருகிறது.

மனஅழுத்தமும் பதட்டமும் தேவையில்லாமல் ஏற்படும்போது ஈரல் தடுமாற்றத்தோடு சர்க்கரை சக்தியை வெளிப்படுத்திவிடும். இந்த நிலை அடிக்கடி நேரக்கூடாது. அதனால் மனநலமும் உடல்நிலையும் ஆழமாக பாதிக்கப்படலாம்.. ஈரலில் சேமிக்கப்படும் சர்க்கரை சக்தி  உடலின் தேவைக்கு ஏற்ப  இயல்பாக வெளிபட்டு ஈடுகொடுப்பதாக இருக்க வேண்டும்

ஈரல் மற்றொரு வேலையும் செய்கிறது.
உணவில் உள்ள உணவுக்கொழுப்பை உடலியக்கத்திற்கு உகந்த  சக்தியாக மாற்றும் வேலையை ஈரல் மற்றும் பித்தப்பை செய்கிறது இயந்திரங்களில் பாகங்கள் தேய்ந்து  விடாமல் தடுக்க எண்ணெய் பசை உதவி செய்வது போல் அதியடர்த்தி கொழுப்பு சக்தி உடல் இயக்கத்திற்கு உதவுகிறது. உழைப்பாளிகளுக்கு கொழுப்பு சக்தி அத்தியாவசிய தேவையாகும். ஆனால் சமூகத்தில் கொழுப்பு  தவிர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது (உடல் உழைப்பு இல்லதவனுக்கு நுண் அடர்த்தி கொழுப்பு இரத்தக்குழாயில் படிந்து அடைப்பு ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுக்கும்)

.உடலாலும் மனதாலும் நம்மால் சுமக்க முடியாத உளைச்சலையும் வேலைபளுவையும் இந்த சமூக அமைப்பு நம்முள் திணிக்கிறது. அன்றாட வாழ்வில் பயமும் பதட்டமும் நிரந்தரமாக மாறி ஈரலுக்கு அதிக தாக்கம் தருகிறது. சர்க்கரை நோய் என்பது சமூகத்தின் தாக்கத்தால் உளவியல் அடிப்படையில் உருவாகும் உடலியக்க கோளாறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.                                                                                                                     
.மனித சமுதாயம், எட்டு மணி நேரம் உழைப்பு, எட்டுமணி நேரம் உறக்கமும் ஓய்வும் இருக்க வேண்டும். எட்டுமணிநேரம் தன்நலப் பணிகளுடன் அகமகிழ்வு அனுபவிக்க வேண்டும். இந்த சமூக ஒழுக்கம் இருக்கும்போது மட்டுமே மனிதனின் மனநிலை சமநிலையில் இயங்கும்..

சீரான உடல் நலம் கொண்டவர் உடலில் நிகழ வேண்டிய செயல்கள்

1)உணவில் உள்ள சர்க்கரை சக்தி தேவையான அளவு மட்டும செரிமானம் நடைபெற வேண்டும்,                                                                     2)உபரி சர்க்கரை சக்தியை ஈரல் சேமிப்பு செய்திட வேண்டும்             3) ஈரலில் சேமித்த சக்தி முறையாகவெளிப்படவேண்டும்,                        4) கணயத்தில் முறையாக இன்சுலின் வெளிப்பட்டு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் தன்மையை மாற்றி செல்களுக்குள் சேர்க்க வேண்டும்           5) செல்களில் சேர்ந்த சக்தி படைப்பு மற்றும்  உற்பத்திக்கான உழைப்பில் ஈடுபட்டு சீராக எரிக்கப்பட வேண்டும்


இவை சரியாக நிகழாத போது சர்க்கரை நோயாளி என நாம் ஆகிறோம் ,

உலகத்தின் இயக்கமும், முன்னேற்றமும் மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் உழைப்பால் மட்டுமே நிகழ்கிறது. இந்த கோட்பாட்டை பொய்யாக்கி மனித உழைப்பு இல்லாமல் இயந்திரங்கள், கருவிகள்,வாகனங்களின் ஆதிக்கத்தில், மனிதர்களுக்கு வேலை வாய்ப்பும் உடல் உழைப்பும் இல்லாத சமூகத்தை உருவாக்கி,  வணிக கோட்பாடு உலகத்தை ஆள்கிறது.

சர்க்கரை பணக்காரர்களுக்கு நோய்
நம்முன்னோர்கள் காலத்தில் செல்வந்தர்கள் வெள்ளைச் சர்க்கரையைஉபயோகித்தார்கள்.  கூலித்தொழிலாளிகளோதங்கள் சக்திக்கு ஏற்பகருப்பட்டிவெல்லம் போன்றவற்றை உபயோகித்தார்கள்பணக்கார குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவும்,கூலித்தொழிலாளிகளின் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின்தாக்கம் குறைவாகவும் இருப்பதை  மருத்துவ சோதனைகள் நிரூபித்துள்ளன. அதனால்தான் சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோய் என கருதப்பட்டது.


பணக்காரர்களின் நோய் எப்படி ஏழைகளின் நோயாகவும் மாறியது.
கருப்பட்டி, வெல்லம் உள்ளூரில் விவசாய தொழிலாளர்களே தயாரித்தனர். பெரிய முதலாளிகளின் ஆலைகளில் சர்க்கரை தயாரிக்கப்பட்டதால் சர்க்கரை உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்ட கருப்பட்டி வெல்லம் உண்ணும் பண்பாட்டை அழித்து, அனைவரும் வெள்ளை சர்க்கரை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் அதன்பின்னர்  கருப்பட்டிக்குப் பதிலாக வெள்ளைசர்க்கரையை  பாமர மக்களும் உபயோகப்படுத்த கட்டாயத்திற்குள்ளானார்கள். அதன்விளைவுதான் சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும்நிலையாக மாறியது
சர்க்கரை நோய்க்கான சமூக சூழல்
அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் நிறைய வேலைகளை குறைவான ஆட்களை நியமித்து பதட்டத்துடன் வேலை வாங்குகிறார்கள். இதனால் ஈரல் தூண்டப்பட்டு சர்க்கரை வெளியாகி இரத்தத்தில் கலக்கிறது ஆனால் அவை எரிக்கப்படுவதில்லை.
சமுதாயத்தில் படித்து தகுதி பெற்ற இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் வெறும் உடலை சுமந்துகொண்டு வாழ்கிறார்கள்.அவர்கள் உண்ட உணவு சக்தி என்ன ஆவது.

மகிழ்ச்சியின் அடையாளமாக ஸ்வீட் எடு கொண்டாடு என இனிப்பை தருவதும், காபி, டீ, மது அருந்தி ஈரலை தூண்டி சர்க்கரையை வெளிகொணர்வதும்  சமூக மரபாக்கிவிட்டார்கள்.

மாற்றுவழி என்ன ?

எவனோ ஒரு முதலாளிக்கோ அல்லது நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ  மனப்பதட்டத்தோடு உழைக்கிறோம்.
 உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்கும் உரிமை நமக்குண்டுஅல்லதுஊதியத்திற்குரிய வேலை இவ்வளவுதான் என்று வேலை நிறுத்தம்செய்யும் உரிமையும் நமக்குண்டு. சம்பள உயர்வு, போனஸ் கேட்டு போராடுவது போல் வேலை கலாச்சாரத்திற்காகவும் போராட வேண்டியுள்ளது.  நமது வேலைகளுக்கேற்ற உணவு குறையின்றி உண்ண வேண்டும்.  உட்கொண்ட உணவிற்கேற்ற வேலைகள் செய்தாக வேண்டும்.

நமது உடல் உழைப்பை, நாமே நேசிக்க வேண்டும் ஆசைப்பட்டு அன்றாடம் நமது சொந்த வேலைகளில் வியர்வை வடிய ஈடுபட்டு மகிழ்வுற வேண்டும்.
 ஒவ்வொரு நிமிடமும் நமது உழைப்பால் உடலுக்குள் சர்க்கரை சக்திஎரிக்கப்பட வேண்டும்காலையில் ஒரு மணிநேரம் நடைபயிற்சி,உடற்பயிற்சி, தியானம், யோகா மூலம் எனது  உடலை சமநிலையில் பராமரிக்க முயல்கிறேன் என்பது நிரந்தர மாற்றத்திற்கு உகந்ததுஅல்ல.

கோ.சுரேந்திரபாபு  /  செல். 9444468670 email.friendsurender@gmail.com


Saturday, 7 November 2015

வாழ்க்கை ஒரு மூன்றுவழிப்பாதை



ஒரு செல்வந்தர் தன் மூன்று மகன்களிடம் சில லட்சம் பணம் கொடுத்து நான் இமய மலைக்கு சென்று திரும்புவதற்கு முன்னர் முழு பணத்தையும் பயன்படுத்திட வேண்டும். அத்தோடு மட்டுமல்லாமல் அதன் பின்னர் என் பணத்திலிருந்து தொடர்ந்து செலவு ஏற்படும்படி அந்த பயன்பாடு இருக்க வேண்டும். நீங்கள் என் பணத்தை பயன்படுத்திய வழியையும் தொடரப்போகும் செலவினத்தை பற்றியும் நேரில்  பார்த்தபின்னரே உங்களுக்கு என் சொத்துக்களை தருவேன் என கூறிச்சென்றார்.திரும்பி வந்து மூன்று மகன்களிடமும் கேட்டார் .
முதல் மகன் தன் வீட்டின் தோட்டத்தையும், மரங்களையும் அழித்து பெரிய வீடு கட்டி முழுவதும். குளிர்சாதனவசதியோடு அமைத்திருந்தார்  அத்தோடு கார்,  டீ.வி, பிரிட்ஞ், மிக்சி, கிரைண்டர், ரேடியோ என எல்லா பொருட்களையும் காட்டினான். அப்பா !  இந்த நுகர்வுப்பொருட்கள் என்னை குதூகலப்படுத்துகிறது அதே சமயம் அவற்றால் தொடர்ந்து  பெட்ரோல் மற்றும் மின்கட்டண செலவுகள் வரும் என்றான். உங்கள் கட்டளைப்படி செய்துள்ளேன் எனக்கு சொத்தினை தாருங்கள் என்றான்

அப்பா அதை கேட்டுவிட்டு அடுத்த மகனிடம் கேட்டார்.
இரண்டாவது மகன் தன் வீட்டுடன் சேர்த்து பெரிய கோவிலை கட்டிவைத்திருந்தான் அதைக் காட்டி .இந்த கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜை நடக்கிறது மதியம் அனைவருக்கும் இலவசமாக அன்னதானம் அளிக்கப்படுகிறது தினமும் தானம் தருமம் செய்கிறேன் அதனால் நிறையவே செலவாகிறது. இதில் எனக்கு ஒருவித ஆன்மீக மகிழ்ச்சி கிடைத்துள்ளது என்றான்.இந்த செலவு தொடர்ந்து  நீடிக்கும் என்றான். நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன் சொத்துக்களை எனக்கு தரவேண்டும் என்றான்

அப்பா அதையும் கேட்டு சிரித்தபடி மூன்றாவது மகனிடம் போனார்.
அப்பா,     நீங்கள் கொடுத்த பணத்தில்  நான் சிற்பக்கலை, ஓவியக்கலை  மற்றும்  இலக்கியப்படைப்புக்கான பயிற்சிகளும் பெற்றுக்கொண்டேன். அதில் புதிய படைப்புகளையும் உற்பத்தியும் செய்கிறேன். அவ்வாறு செய்யும்போது உடலில் சிக்கல்களும் சிரமங்களும் ஏற்பட்டு ஓர் இதமான வலியையும் அனுபவிக்கிறேன். இது எனக்கு பிடித்திருக்கிறது. இதை உங்கள் பணத்தைக்கொண்டு நான் உருவாக்கிக்  கொண்டேன். உங்களுக்கு என் நன்றி.  இனி எனது புதிய படைப்புக்கான மூலப்பொருட்களை வாங்க உங்கள் பணத்திலிருந்து தொடர்ந்து செலவிட வேண்டும்.  என் உழைப்பினால் நிறை படைப்புகள் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்,  அதன்மூலம் வரும் செல்வம் எனக்குப்போதும். உங்கள் சொத்தில்  பங்கு, எனக்கு வேண்டாம் என கூறினான்.


நமது சமூகத்தில் இதே போல், மூன்றுவகை கோட்பாடுகளில் வாழ்கிறோம்

.பொருட்களின் நுகர்வுக்கலாச்சாரத்தால் பொன், பணம், பொருள், நிலம்,என சொத்து சேர்க்க அலைபாய்கிறோம். இது பொருள் அடிப்படையிலான வாழ்க்கை முறை. இதற்காக பல உணர்வுகளை நாம் அழித்துக் கொள்கிறோம், இழக்கிறோம்.


அடுத்தது காதல், காமம், ஆசை, பாசம், நட்பு, கடவுள் நம்பிக்கை, ஆன்மீகம் என்ற உணர்வு சார்ந்த அகமகிழ்வு அனுபவிப்பதை அடிப்படையாக கொண்டது. கடவுளை கண்ணால் காண முடியாது அது மனதால் உணரக்கூடிய அனுபவ சுகம். இது உருவமோ வடிவமோ இல்லாத உணர்வு வாழ்க்கை முறை. அதை அனுபவிக்க பணத்தையும் பொருட்களையும் இழக்க சம்மதிக்கிறோம்.


மூன்றாம் வழி;  நமக்குள் இருக்கும்  உழைப்புத்திறனை பயன்படுத்தி பிறருக்கு அகமகிழ்வு தரும் படைப்புகளையும் பொருள் உற்பத்தியையும் இந்த சமூகத்திற்கு தருகிறோம். அப்படிப்பட்ட செயலில் ஈடுபடும்போது ஏற்படும் வலியையும்  எதிர்ப்புகளையும் சந்திப்பதில் இதமான சுகத்தை அனுபவிக்கிறோம்.

எனக்குள் இருக்கும் உழைப்பாற்றலை இந்த உலகிற்கு அளிக்க வாய்ப்பும் வசதியும் எனக்கு இருக்க வேண்டும். இந்த உலகில் உருவாக்கப்படும்  அனைத்து பொருட்களை அடையவும் அனுபவிக்கவும் உரிமையும் சுதந்திரமும் எனக்கு இருக்க வேண்டும்.என்பது வாழ்வின் இலக்காக உள்ளது. 

நமது எதிர்ப்பார்ப்புகளையும் வாய்ப்புகளையும் அடைய ஒவ்வொரு கணமும் போராடுவதில் சுகம் இருக்கிறது. அந்த சவால்களை கடக்கும் போது  உடல் மற்றும் மனதாலும் நிறைவு ஏற்பட்டு மகிழ்வுறுகிறோம். இந்தப் பாதையில் பொருள் பெறுகிறோம் மற்றும் உணர்வும் அனுபவிக்கிறோம் 

மூன்றாம் கோட்டாபாடான இந்த வாழ்க்கைமுறையில் ,மூளை, மனம், உடல் மூன்றும் இணைந்து அனுபவிக்கும் சுகம் உள்ளது. இப்படி வாழ்வதே நிறைவான வாழ்வியல் முறையாகும். 

இதுவே உலகில் மனித இனம் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களையும் இயற்கையின் இயக்கத்தையும் பாதுகாக்கும்.
நமது நாட்டின் அரசியலில் உள்ள பிரிவுகள்
1)பொருடைமைவாதிகள்,    (அதிகார அரசியல்)
2)ஆன்மீகவாதிகள்           (மதவாத அரசியல்)
3)பொதுவுடைமைவாதிகள்  (இடது சாரி அரசியல்)

என்ற மூன்றுவழி அரசியல்கோட்பாடுகள்  போட்டி களத்தில் உள்ளன. இதில் யார் தோற்கிறார்கள் எவர் வெல்கிறார்கள் என்பதை வேடிக்கை பார்க்கும் ஊமைப் பார்வையாளர்களாக  மக்கள் இருக்கிறார்கள்.
இம்மூன்று கோட்பாட்டில் எதை அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும் என்பதில் விழிப்புணர்வும் தனக்கு தேவையானதை தீர்மானித்து தேர்ந்தெடுக்கும் துணிச்சலும் மக்களுக்கு தேவைப்படுகிறது

மூன்று கோட்பாடுகளை புரிந்துகொண்டவர்கள், அந்த தகப்பன்  யாருக்கு தன் சொத்துக்களை தர வேண்டும் என்று  தீர்ப்பு சொல்ல முடியும்.

கோ.சுரேந்திரபாபு. உதவி ஆணையர் (ஓய்வு)  செல்பேசி 9444468670.              Email: friendsurender@gmail.com


Monday, 2 November 2015

old songs


பெண்ணின் பெருமையை  தனி மனிதனாக மகிழ்ந்து பாடும் பாடல் இது



பெண்ணின் பெருமையை கூறும் இந்தப்பாடல் தனிமனித உணர்வாக காட்டாமல் கூட்டாக குடும்ப மகிழ்வாக கூடிக்களிப்படையும் பாடலாகும்



சமூகத்தில் குழந்தைகள் வளரும் வித த்தில் உள்ள வேறுபாடுகள் உள்ளது மகிழ்வுடன் பெற்றோருடன் வாழும் குழந்தைகள் உள்ளனர் அது ஒரு வகை
கூட்டாக மகிழ்வுரும் பாடல் காட்சி இது



அன்பு பாசம் எதையும் பெறாமல் அனாதைகளாக்கப்படும் குழந்தைகளும் இந்த சமூகத்தில் வாழ்கிறார்கள்.தனிமனித உணர்வாக ஆக்கப்பட்ட பாடல் இது




                             
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா

விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா

வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா

விண்ணில் செல்லத்தான் உன் சிறுகுகள் தருவாயா



நதி என்பது ஓர்நாள் கடலென்பதை சேரும்

எப்போதுமே ஓடும் நதியாகலாம்

ரோஜா செடி போலவே நீ பூக்கலாம் இங்கே

காற்றோடு போராடும் குணம் வேண்டுமே



அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே

ஒரு பறவை மோதி கோபுரந்தான் சாய்ந்திடக்கூடாது

தோழனே தோழனே ஓவியன் கைவலி சித்திரம் ஆகுது

ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது



காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா

விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

புயல் வீசுமே என்று கரையோரமாய் நின்று

அணைகட்டினால் அது ஓய்வதில்லை

மழை தூருமே என்று நடுவானிலே

திரைகட்டினால் மழை முடிவதில்லை

எரிமலைமேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது

மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட முடியாது

உன்னை யார் வெல்வது

சிப்பியின் பொறுமைதான் முத்துபோல் மின்னுது

இலைகளின் சக்திதான் கனிகளை தாங்குது



காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா

விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா

வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா