Thursday, 29 October 2015

மனித இனத்தை ஆண்டுகொண்டிருப்பவை



மனித இனத்தை ஆண்டுகொண்டிருப்பவை இரண்டு கோட்பாடுகள்.

1, உழைப்பு+உற்பத்தி.
2, நிதி மூலதனம் +லாபம்

இவ்விரு கோட்பாடுகளில் ஏதோ ஒரு அணி உலகினை சர்வாதிகாரம் செய்து சமூகத்தை நடத்திக்கொண்டிருகிறது.

முதல் கோட்பாடு மார்க்சியம் மற்றும் சமூக உளவியல் அடிப்படையாக கொண்டுள்ளது.மக்களிடையே தவறுகள் நிகழும்போது சமூக இயக்கத்தை பரிசீலித்து அடிப்படை அமைப்பை புதுமையாக மாற்றிக்கொள்கிறது..தனிமனித குற்ற குணச்செயல்களுக்கு தண்டனை தந்து திருத்துகிறது.

இரண்டாவது கோட்பாடு இரு பிரிவினராக உள்ளது. 1) பொருளாதாரம் (நுகர்வுக்கலாச்சாரம்) மோகத்தை ஏற்படுத்துவதும் பணம் பொருள் செல்வம் சேர்க்க போட்டி பொறாமை தாழ்த்துவது வீழ்த்துவதுமான சமூக மரபு வளர்க்கப்படுகிறது.

2)மதவாதம் உணர்வுகளால் ஆதிக்கம் செய்து மக்களை உளவியல் அடிப்படையில் அடிமைப்படுத்தி, வைத்து ஆள்கிறது.இதில் போட்டி பொறாமைகள் இல்லை அராஜக அடக்குமுறையில் அடிமைப்படுத்துவது தாழ்த்தி வைப்பது, தள்ளி வைப்பது மரபாக கொள்வது.
முதல் இரு அணிகளுக்கு கோட்பாட்டில் வேறுபாடு இல்லை நடைமுறையில் போட்டிப்போடுகிறார்கள்.
.மனித தவறுகள் நேரும்போது . அதிகார வடிவில் தண்டித்து பழிவாங்கும் ஒரு பிரிவும்.
மற்றொரு பிரிவு மதவாத உணர்வுகளால் அடக்கி மக்கள் மனதில் ஆதிக்கம் செய்து பிரித்து ஆள்கிறது.

ஆனால் உழைப்பு +உற்பத்தி கோட்பாட்டை பின்பற்றுபவர்கள்  பொதுவுடைமைகொள்கையை அடிப்படையாக கொண்டு முற்றிலும் வேறுபட்டவர்கள்.இவர்கள் மூன்றாம் அணி எனலாம்

உழைப்பை மட்டும் உடைமையாக கொண்ட மக்களின் உழைப்புக்குரிய ஊதியமும்,தேவைக்கேற்ற குறைந்தபட்ச வாழ்க்கை தேவைகளும் கிடைக்கும்படி சட்டமும் நிர்வாகமும் இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட வாழ்க்கை தனக்கு வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய சிரம ம் இவர்களுக்கு உள்ளது.அந்த மாற்றம் மக்களிடையே ஏற்படாதவரையில் இவர்களுக்கு ஆளும் வாய்ப்பு கிடைப்பது அரிது.
.
மூன்று அணிகளும் தங்கள் கோட்பாட்டை மக்களிடையே நடைமுறைப்படுத்த இராணுவம், ,காவல்துறை, ஊடகத்துறை, நிர்வாக கட்டமைப்பு மற்றும் நீதி மன்றங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சிபுரிய தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்ள மத்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு மோதுகின்றன.
இந்தியாவில் முதல் இரண்டு அணிகளான காங்கிரஸ்,பாரதீய ஜனதா கட்சிகள் ஒரே கோட்பாடுடன் இரண்டு அணிகளும் மக்களின் ஆசை பாசம் சபல உணர்ச்சிகளை நிர்வகித்து அவர்களின் மனதை குறிவைத்து தங்கள் பக்கம் திருப்பி வைத்துள்ளனர்
மூன்றாம் அணியாக இடது முன்னணி அறிவியல் அடிப்படையில் மக்களின் மூளையை குறிவைத்து மற்ற இரு அணிகளின் பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி ஆதரங்கள் புள்ளிவிவரங்களோடு பேசி நிரூபணங்களை அளித்துக்கொண்டிருக்கிறது..எப்படிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் அமைப்பும் தனக்கு வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்டுத்தாதவரையில் இவர்களுக்கு ஆளும் வாய்ப்பு கிடைப்பது அரிது.
அறிந்தவற்றில் சிலவற்றை எழுதுகிறேன்
கோ.சுரேந்திரபாபு செல்பேசி 9444468670






மூன்றாம் வாழ்வியல் கோட்பாடு என்றால் என்ன

முகநூல் பதிவில் படித்த தகவலும் எனது பதிவும்
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது.
நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்;
# ஆனால், நடந்ததோ வேறு…
“பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ…’ என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, “இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு…’ என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள்.
தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, “இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ…’ என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.
அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். “குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது.
மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்…’ என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்
ஒவ்வொரு பெற்றோரும் ‪#‎குழந்தைகள்‬ வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே
Like   Comment   
Comments
Surendra Babu

பொய்களை புரிந்து கொள்ளும் போது உறவுகள் காக்கப்படுகின்றன

முகநூல் பதிவில் ஒருவர் போட்ட பதிவிற்கு  நான் இட்ட பதில் பதிவு இது

மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை..


“தவிப்பு..”

வருடத்திற்கு ஒரு முறை
இரண்டு வாரம்
தாய் வீடு போகிறாய்...
பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...
காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..
வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..
இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...
முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...
தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...
கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..
தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..
இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...
“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....
ஒரு வார இதழில் 1500 ரூபாய் பரிசு பெற்ற கவிதை.
Like   Comment   
Latha Manick likes this.
Comments
Surendra Babu கூசாமல் பொய் சொல்கிறேன்...
“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....இது பொய் என்று மனைவிக்கும் தெரியும் மனைவியும் பல பொய்களை கூறுகிறாள்.அதுவும் கணவருக்கு தெரியும்.அந்த இரகசிய ரசனைதான்(காதலர்கள் உட்பட)ஆண்பெண் இருவரையும் சேர்ந்து வாழ வைத்துக்கொண்டிருக்கிறது
LikeReply1 minEdited

Katre Poongatre Oru Kavithai - Priyamana Thozhi HQ (RKs)


இங்கே உள்ள பாடல் வரிகளை கண்கள் படித்துக்கொண்டே பின்னால் உள்ள பாடலின் குரலை காதால் கேட்க வேண்டும் கண் காது இரண்டும் ஒருசேர செயல்படும்போது மூளைக்கு சிறந்த பயிற்சி கிடைக்கும். இதுவே மனக்குவிப்பு பயிற்சி ஆகும்              
முதியவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால்                                          நினைவிழப்பு குறையிலிருந்து மீள உகந்த பயிறசியாக இருக்கும்.






காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா                                                விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா                                     தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா                                          வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா                                                காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா                                          விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

நதி என்பது ஒர்நாள் கடலென்பதை சேரும்                                                   எப்போதுமே ஓடும் நதியாகலாம்                                                                ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே                                      காற்றோடுபோராடும் குணம் வேண்டுமே

அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாது                                                      ஒரு பறவை மோதி கோபுரந்தான் சாய்ந்திடக்கூடாது                                     தோழனே தோழனே ஓவியன் கைவலி சித்திரம் ஆகுது                                  ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா                                                விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா



புயல் வீசுமே என்று கரையோரமாய் நின்று                                              அணைகட்டினால் அது ஓய்வதில்லை                                                          மழை தூருமே என்று நடுவானிலே வந்து                                           திரைகட்டினால் மழை முடிவதில்லை                                                  எரிமலையின் மேலே தண்ணீர் ஊற்றி                                                      அணைத்திட முடியாது                                                                             ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது                                            உன்னை யார் வெல்வது                                                                     சிப்பியின் பொறுமைதான் முத்து போல் மின்னுது                                       இலைகளின் சக்திதான் கனிகளை தாங்குது

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
                                                                                                     விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
                                                         
                                           
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா
                                                        
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா




Monday, 26 October 2015

தனிமையின் துணையோடு

தனிமையின் துணையோடு ----கோ.சுரேந்திரபாபு

என் செல்ல மகனே                                                                                             நீ சின்ன வயதில்
சிணுங்கி அழுதாலும்                                                                                     தாங்க மாட்டாள் உன் தாய்
நள்ளிரவில் நீ                                                                                        நனைத்திடுவாய் படுக்கையை
இரவின் குளிரில்                                                                               ஈரத்துணியை துவைப்பாள்
அன்பின்கதகதப்பால்                                                                        அரவணைப்பாள் உன்னை
நீ நடந்தால் உன்                                                                                              முழங்கால் வலிக்கும்
நீ நின்றால் உன்                                                                                      பூப்பாதம் நோகும்.
உன்கண்ணில் தூசி விழுந்தால்
அவள்கண்கள் கலங்கும்.
ஆடினாய் பாடினாய் 
அழகாய் பேசினாய் 
பெரிதாய்படித்தாய்
பெருமைப்பட்டோம்.
மகனே
உன்னை நாங்கள்                                                                                       தொடும்தூரத்தில் .
தொலைத்துவிட்டு தேடுகிறோம்
அயல்நாட்டு நிறுவனம்                                                                                                                                             அள்ளும் லாபத்திற்கு
அல்லும்பகலும்                                                                                                                                                                    அயராது உழைத்து
அழிவை அணைக்கிறாயே
தூரத்தில் இருந்தாலும்                                                                              தெரிகிறது மகனே                                                                                        இரவு முழுவதும்                                                                                       எங்கோ இருக்கும்
எவனோ ஒருத்தனுகாய்                                                                          


வேலைகள்முடித்து
விடிந்தத பின்னர்                                                                                           வீட்டிற்கு வந்தாய்
எரிந்து விழுந்தாய்                                                                                                     எங்கள்மேல்
எங்கள் அவதிக்குமருந்திட 
இயலாநிலையில்  நீ                                                                              உன்வலியை  உணர்ந்தோம்                                                                                                                                                               
அன்பாய் நீயிருக்கிறாய்
அவதியை நாங்கள்
அனுபவிக்கிறோம்
பாலூட்டி சோறூட்டி 
பாசம்காட்டி பகல்இரவாய்
பாதுகாத்து                                                                                         
பன்னாட்டு காரனுக்கு 
அடிமையாக்க 
அன்புமகனே உன்னை
அர்ப்பணித்து விட்டோம்

தவப்புதல்வனே உன்
மனவலியை காண்பதற்கு
மனவலிமை எங்களுக்கில்லை
மரணத்தின் மவுன ராகத்தில்
நாங்கள் அழுகின்றோம்
அது அடங்கும்வரை
ஆருயிர் மகனே
ஆயுளை முடித்திட                                                                                      தனிமையின் துணையோடு 
முதியோர் இல்லத்தில்
மூச்சை விடுகிறோமே.

கோ.சுரேந்திரபாபு –செல்பேசி 9444468670.


சர்க்கரை நோய் பற்றி சில கசப்பான உண்மைகள்

தீக்கதிர் நாளிதழின் வண்ணக்கதிர் இணைப்பு பிரிவில் 2-8-2015 அன்று சர்க்கரையின் இனிப்பும் சமூகத்தின் திணிப்பும் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை.---கோ.சுரேந்திரபாபு                                                                                          எல்லா மனிதருக்கும் மனதில் ஆசைகள், இலக்குகள், அதனை நிறைவேற்ற திட்டங்கள் இருக்கும். அந்த திட்டங்களை செயல்படுத்துவது உடல் உறுப்புகள். உடலை இயக்குவது நமது உடலின் செல்களும் திசுக்களும் ஆகும்.நாம் உண்ணும் உணவில் உள்ள சக்தியை செரிமான உறுப்புகள் நமக்குள் இருக்கும் திட்டங்களை செயல்படுத்த எவ்வளவு சக்தி தேவையோ அதை எடுத்து இரத்தத்தில் செர்க்கிறது.இரத்தத்தில் செர்ந்த சர்க்கரை சக்தியை கணையம் சுரக்கும் இன்சுலின் அந்த சக்தியை தன்மையை மாற்றி செல்களில் செர்க்கிறது. இது இயற்கையின் உடல் இயக்கம் ஆகும்.

 நாம் செயல்படுத்த முடியாத கனவுகள் திட்டங்களை வைத்திருக்கும்போது செரிமான உறுப்புகள் நமது எண்ணங்கள் மற்றும் திட்டங்களுக்கு தேவையான் உணவுச்சக்தியை எடுத்து இரத்தத்தில் சேர்க்கின்றது. செல்களுக்கும், திசுக்களுக்கும் அந்த அளவுக்கு வேலையை உடல் உறுப்புகள் தராமல் இருக்கும் போது அந்த சக்தியை சேல்கள் இரத்தத்திலிருந்து உள்வாங்காமல் நிராகரித்துவிடும்.செல்களால் ஏற்றுக்கொள்ளாத சர்க்கரை சக்தி இரத்தத்தில் தங்கிவிடுகிறது.உடல் உறுப்புகள் உழைப்பில் ஈடுபட்டு செல்களுக்கும் திசுக்களுக்கும் வேலை கொடுத்தாலன்றி செல்கள் இந்த சக்தியை உள்வாங்கிக்கொள்ளாது. தனக்கு இது தேவையற்றது என நிராகரித்துவிடுகிறது.
 இதனால் இதன் அடிப்படையில் கணையமும் இனி செல்கள் சக்தியை ஏற்காத நிலையில் இன்சுலீன் சுரப்பதை நிறுத்திக் கொள்கிறது. இந்த தருணத்தில் செயற்கையாக இன்சுலின் ஊசி மூலம் உடலில் செலுத்தி வலுக்கட்டாயமாக செல்களுக்குள் சக்தியை திணிக்கிறோம். தனக்கே வேலை இல்லை இந்த நிலையில் உபரியாக உள்ளே வரும் சக்தியை மற்ற செல்களும் திசுக்களும் அந்ந சக்தியை கருங்காலிகளாக ஒதுக்கிவிடுகின்றன.

வளமான விளைச்சல் நிலத்தில் பயிரிடப்படாத பகுதிகளில் களைகளும் புல் பூண்டுகள் முளைப்பது போல அந்த உபரி சக்தி நாளடைவில் செல்களுக்கு ஊடாக புற்றுநோய் கட்டிகளாக உருமாற்றம் பெற்றுவிடுகின்றன. அப்புற்றுநோய் செல்களுக்கு வேலை இல்லை. இவை இயல்பாக உள்ள உடல் செல்களிடமிருந்த சக்தியை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன.இயற்கை செல்களில் ஒரு கருமட்டும் இருக்கும் கேன்சர் செல்களில் வடிவம் வேறாகவும்  இரட்டை கருவும் இருக்கும். நாம் உண்ணும்  உணவில் உள்ள சக்தியை இந்த புற்று செல்களை ஒட்டுண்ணியாக தின்னும். எனவேதான் புற்றுநோய் உயிர்க்கொல்லி நோயாக கருதப்படுகிறது.சமூகத்தில் எந்த நிறுவனமும் சிறிய வேலைக்கு கூட பதட்டமும் மன அழுத்தமும் தந்து வேலை வாங்கும் கலாச்சாரம் பின்பற்றுகின்றன. இதனால் மனம் அதிகமாக வேலை செய்கின்றது அந்த அளவுக்கு உடலுக்கு வேலை இருப்பதில்லை.பதட்டம் பொக்க காபி டீ மது குடிக்கிறோம்.வேலைபளு உள்ளது என்ற கணிப்பில்  உண்ணும் உணவிலிருந்து அதிக சக்தியை சேரிமான உறுப்புகள் எடுத்து கொள்கிறது.

 சர்க்கரை நோய் என்பது தனிமனிதர்களின் நோய் அல்ல இது வேதிப்பொருள் கலப்பு உணவுகள், குடிநீர், காற்று அனைத்தும் நச்சு கலந்துள்ள சமூக சீர்குறைவினால் எற்படுத்தப்பட்ட சமூக  ஒழுங்கீன வாழ்க்கைக் கலாச்சாரத்தால் உடல் இயக்கம் சீர்கெட்டுபோவதால ஏற்படுகிறது. 
                                                                                                                                                                                                                       சீரான சமநிலையில் உள்ள உடல் இயக்கத்தில் நிகழவேண்டிவை;
1)உணவில் உள்ள சர்க்கரை சக்தி தேவையான அளவு மட்டும செரிமானம் நடைபெறுதல், 2)உபரியாக உள்ள சர்க்கரை சக்தியை ஈரல் சேமிப்பு செய்தல், 3) ஈரலில் சேமித்த சக்தி முறையாக தேவைப்படும் போது மட்டும் வெளிப்பட்டு பயன்படுதல், 4) கணயத்தின் முறையான சுரப்பின் காரணமாக இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் தன்மையை மாற்றி செல்களுக்குள் சேர்ப்பது 5) செல்களில் சேர்ந்த சக்தி உடலின் ஆக்கப்பூர்வமான படைப்பு மற்றும் உற்பத்திக்கான உழைப்பால் எரிசக்தியாக செலவாவது,உடலை இயக்கி சக்தியை எரிப்பது என்றது வெறும் உடல் உறுப்புகளை இயக்குவதுமட்டுமல்ல.உடலின் உறுப்புகள் ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பிலோ உற்பத்தியிலோ ஈடுபட்டு அந்த படைப்பிற்கான வேகுமானத்தை பெற்று அகமகிழ்வும், மனநிறைவும் பெற வேண்டும்.உடலின் சக்தி அகமகிழ்வு தரும்மனமநிலை  மற்றும் இதமான சுகம் தரும் உடல்உழைப்பு இரண்டும் சேர்ந்து இயங்கி அதன் மூலம் உடலின் சக்தி எரிக்கப்பட வேண்டும். எந்த படைப்போ உற்பத்தியோ இல்லாமல் மனநிறைவும் ஏற்படுத்தாத இயந்திரத்தனமான உடற்பயிற்சி நடைபயிற்சி, தியானம், யோகா பயிற்சிகள் நிர்ந்தர பயன் தராது.

 சமூக கொட்பாடே ஒழுக்கமும் நேர்மையும் கொண்ட பண்பாடாகவும் வழக்கங்களாகவும் இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது. சமூக அளவில் நாம் ஒழுங்கீனமான வாழ்கையை வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாய சூழலில் வாழ்கிறோம்.நவீன ரக இயந்திரங்கள் கருவிகள் புறச்சூழலை மாசுபடுத்தும் உற்பத்திச்சாலைகள்,வேதிப்பொருட்களால் ஆன உணவுப்பொருட்களை கட்டாயமாக உண்ண வேண்டிய நிலை, சுவாசிக்கும் காற்று குடிநீர் யாவும் நச்சு கலந்துள்ளதாக உள்ளது. சமூகமே தறிகெட்ட ஒழுங்கற்ற முறையில் அமைந்தவிட்டதால் தனது நியாயமான ஆசைகளை நேர்மையான வழியில் சென்றும் நிறைவேற்றிக்கொள்ள முடியாத மனிதர்கள் தடம் மாறவேண்டிய கட்டாய சூழலுக்கு உள்ளாகிறார்கள்.அதுவே அவர்களின் மனநிலையை பாதிக்கிறது.சிலர் தீய சக்திகளாக மாறி சமூகத்தை பழிவாங்க முயல்கிறார்கள்.பலர் தங்களின் ஆழ்மனதின் பாதிப்பால் பல உடல்நிலை குறைபாடுகளுக்கு உள்ளாகிறார்கள்.மனநிலை கோளாறுகாளால் தோன்றும் உடல் இயக்க கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள்.இதில் நோய் கிருமிகள் இருக்காது தொற்றுநோயாக இருக்காது மனம் சார்ந்து உடலியக்க கோளாறுகளால் பல துயர்கள் மனித உடலை ஆட்படுத்துகிறது

நமது சமூக அமைப்பில் நோய்கள்யாவும் வணிக மூலப்பொருளாக மாறிவிட்டது.சர்க்கரை நோய் ஒன்றை வைத்து எத்தனை வணிகம் நடக்கிறது என பார்க்கலாம். மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாமல் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் சோதிக்கும் சோதனை மையங்கள் அதில் பல வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் சாதனங்கள் நமது பணத்தில் வாங்கப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தியாகும் ராகி கம்பு திணை சாமை வரகு அரிசி ரகங்கள் இருக்கும் போது வெளிநாட்டிலிருந்து ஓட்ஸ்,காய்கனிகள்  இறக்குமதி செய்து வணிகமாக்குவது.. செருப்பு முதல் கைத்தடி வரை சர்க்கரை நோயாளிக்காக மருத்தவமனையிலேயே வைத்து வியாபாரம் நடத்தப்படுகிறது. இவ்வாறு எல்லா நோயும் வணிகலாபத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. சமூக முழுவதுமான அளவில் வணிக லாபத்தில் சிறைபட்டுள்ளது. தனிப்பட்ட மனிதனாக முயன்று இதற்கு தீர்வு கண்டு விடுதலை பெற முடியாது  சமுதாயம் முழுவதும் சிதைந்து சிக்குண்டு உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

அனைத்து உலகமும் வணிக லாப வேட்டையாடும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பெரும் முதலாளிகளின் குடும்பங்களின் வசம் அடிமைப்பட்டு உள்ளது.அவர்கள் எப்படியெல்லாம் இந்த இயற்கை பூமியை சீரழிக்க முடியுமோ அப்படியெல்லாம் அழித்து கட்டிடங்களாகவும் இயந்திரங்கள் வாகனங்கள் மற்றும் சாதனங்கள் கருவிகளின் காடாக இந்த பூமியை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்..இவர்களிடமிருந்து மனித இனத்தை மட்டுமல்லாமல் இவர்களின் செயலால் அழிந்துவரும் எல்லா உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டிய போர் நடத்த வேண்டியுள்ளது. உடல் மற்றும் உளவியல் நோய்கள் என்பது தனிமனிதனின் பிரச்சினை அல்ல அது உலக அளவில் மனித உடல் உழைப்பை நிராகரிப்பதால் உருவாகும் சமூக பிர்ச்சினை என உணர்ந்து செயல்பட வேண்டும். ஆசைகளை கட்டுப்படுத்து என சமூகத் தீர்வை மதவாதம் ஆன்மீகத்தை கோட்பாடாக வைத்திருக்கும் இயக்கங்களோ, பணம், சொத்து, செல்வம் சேர்கும் ஆசையை தூண்டி பொருளாதார சந்தையில் பந்தையக்குதிரைகளாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வியல் கொட்பாட்டை கொண்டுள்ள வணிக சமூகமோ செய்யாது. உழைப்பை நம்பிவாழும் பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போர் மூலம் மட்டுமே இதற்கான தீர்வும் மாற்றமும் ஏற்படுத்த முடியும். இது பலமான எதிர்ப்பு வந்தாலும் நிச்சயமாக நிகழக்கூடியதே.

கோ.சுரேந்திரபாபு…,B.A.,D.I HOM. (LONDON).                                                                                    உதவி ஆணையர் (ஓய்வு) தமிழ்நாடு அரசு.. செல் பேசி 9444468670                                                                              தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சென்னை. பெரம்பூர் கிளை பொருளாளர்.