Tuesday, 16 February 2016

விசாரணை திரைப்படம்

விசாரணை திரைப்படம் பார்த்தேன்.நமது நாட்டின் அரசு இயந்திரத்தின் ஒரு பாகமான காவல் துறையின் கட்டமைப்பு எந்த அளவுக்கு அழுகிப்போய் உள்ளது என்பது நிர்வாணப்படுத்திக்காட்டும் அரிய படம் இது.
காவல் துறை மட்டுமல்லாமல் நீதித்துறை பொது நிர்வாக கட்டமைப்பு அனைத்தும் பழுது பார்க்க முடியாத அளவுக்கு சீர்குலைந்து உள்ளது.அதில் அரசியல்வாதிகளும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் பிடிக்கு உட்பட்டுவிடுவார்கள் என்பதே உண்மை.
அந்த சமூக அமைப்புக்கான தூண்களில் ஒன்றான அரசு நிர்வாக அமைப்பின் தன்மையை மக்களுக்கு புரிய வைக்காமல், ஐந்து ஆண்டுகள் மட்டும் இருக்கம் அரசியல் வாதிகளின் தனிமனித ஊழல் மற்றும் ஒழுக்கமின்மை பற்றி விமர்சிப்பது மட்டும் அரசியல் ஆகாது என கருதுகிறேன்.
இப்படிப்பட்ட சீர்குலைந்து உள்ள அரசு அமைப்பில் நேர்மையான அதிகாரிகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் நேர்மையான அரசியல் கட்சிகள் கூட நிர்வாகம் பண்ண முடியாது.அந்த அளவுக்கு நிர்வாக அமைப்பு சீர்குலைவு நடைமுறைக்கு உள்ளாகிவிட்டது.
நேர்மையான அதிகாரிகளுக்கு எந்தஅரசியல் கட்சியும் உதவியும், பின்பலமும் அளிப்பதில்லை. அதை போலவே நல்ல கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விழிப்புணர்வு இல்லாத மக்கள் அந்த கட்சிக்கு ஆதராக இருக்கப்போவதில்லை. .உண்மையில் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டிய இந்த சமூக அமைப்பின் உண்மையான லட்சணத்தைப்பற்றிய விழிப்புணர்வு என்ன என்பதை இப்படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம,

No comments:

Post a Comment