Monday, 2 November 2015

மூளைக்கு பயிற்சி தந்து மனக்குவிப்புக்கான பயற்சிப்பாடம்

மிக எளிமையான மொழி நடையில் உருவான பாடல் என்று நான் ரசித்த பாடல்


இருவர் உள்ளம் படத்தில் இடம்பெற்ற அழகு சிரிக்கின்றது என்ற பாடல்.. 

அதில் ஒவ்வொரு வரியிலும் இரண்டு சொற்கள் மட்டுமே இருப்பதை காணலாம்.இரட்டைச்சொற்களை மட்டும் பயன்படுத்தி  காதலும்  காமமும் கலந்த நிகழ்வை அழகியலோடு உருவகப்படுத்தி வேளிப்படுதியிருக்கிறார் கவிஞர்

அழகு          சிரிக்கின்றது
ஆசை         துடிக்கின்றது
பழக            நினைக்கின்றது
பக்கம்         வருகின்றது
                                                                     
 
                                                               
பக்கம்         வருகின்றது                                                                                                 வெட்கம்     தடுக்கின்றது                                                                                             காதல்        கனிகின்றது                                                                                               கையில்விழுகின்றது

வண்டு       வருகின்றது
மலரில்     அமர்கின்றது 
உண்டு       சுவைக்கின்றது
உறங்கி     விழுகின்றது

வானம்      பொழிகின்றது
பூமி             நனைகின்றது
மேனி        குளிர்கின்றது
வெள்ளம் வடிகின்றது

இரவு          விடிகின்றது
இளமை     எழுகின்றது
குளித்து     வருகின்றது
கூந்தல்      முடிக்கின்றது

அருகில்      அமர்கின்றது
அத்தான்      என்கின்றது
ஆர்வம்       பிறக்கின்றது
அன்பு         அழைக்கின்றது
.......
தொடர்ந்து பாடலை கண்டு ,வரிகளை படித்தபடி கவனியுங்கள்




ரசித்தவற்றில் சிலவற்றை பகிர்கிறேன்

கோ.சுரேந்திரபாபு

No comments:

Post a Comment