இன்று உலக சர்க்கரை தினம்.. சர்க்கரை இனிப்பானதுதான் அதில் உள்ள கசப்புகளை படிக்கலாம்.
உணவகத்தில், காபி டீ குடிக்கும் போது வித்தவுட் சுகர் என கேட்பது நடைமுறையாகிவிட்டது. தலைமுறை தலைமுறையாக சர்க்கரை கலந்த தேநீரும், காபியும் குடித்துவந்த நமது சமூகத்தில் அந்த ‘வித் அவுட்’ கலாச்சாரம் எப்படி வந்தது? சர்க்கரைசக்தி உடலில் என்னதான் செய்கிறது ?
தினசரி நாம் உழைக்கவும் வேலைகள் செய்யவும் உடலின் செல்களுக்கும் திசுக்களுக்கும் சக்தி தருவது உணவில் உள்ள சர்க்கரை சக்தி ஆகும். .
எப்படிப்பட்ட வேலையை உடல் உறுப்புகளுக்கு தர இருக்கிறோம் என மனதில் தீர்மானித்ததும் அதற்கேற்ற அளவு சர்க்கரை சக்தியை நாம் உண்ணும் உணவிலிருந்து செரிமான உறுப்புகள் எடுத்துக் கொள்கின்றன.
உணவிலுள்ள சர்க்கரை சக்தியை கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலீன் அதன் தன்மையை மாற்றி செல்களுக்குள் அனுப்புகிறது.
செல்களுக்கும் திசுக்களுக்கும் வேலை கொடுக்காமல் சர்க்கரை சக்தியை உள்ளே அனுப்பினால் அதை செல்கள் ஏற்றுக்கொள்வதில்லை. கணையமும் உயிர்சர்க்கரையாக மாற்றி செல்களில் சேர்ப்பதில்லை. செல்களுக்குள் செல்லாத சர்க்கரை இரத்தத்தில் தங்கிவிடும். அப்போது நாம் சர்க்கரை நோயாளியாகிறோம்.
.
உபரியாக தங்கிய சர்க்கரை சக்தியில் ஒரு பகுதியை நமது ஈரல் சேமித்து வைக்கும். நெருக்கடி கட்டத்தில் அந்த சக்தியை திருப்பித்தரும் .
நிதானமாக வீதியில் நடந்து செல்லும ஒருவருக்கு கால்கள் வலிப்பாதாக உணரலாம். ஆனால் அவரை திடீரென்று ஒரு வெறிநாய் துரத்தினால் அவரே வேகமாக ஓட்டம் பிடிப்பார். அவருக்கு அந்த திடீர் சக்தி எப்படி வருகின்றது. அதுதான் ஈரலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சர்க்கரை சக்தியை ஈரல் வெளிப்படுத்தி நமது உடலுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
மனஅழுத்தமும் பதட்டமும் தேவையில்லாமல் ஏற்படும்போது ஈரல் தடுமாற்றத்தோடு சர்க்கரை சக்தியை வெளிப்படுத்திவிடும். இந்த நிலை அடிக்கடி நேரக்கூடாது. அதனால் மனநலமும் உடல்நிலையும் ஆழமாக பாதிக்கப்படலாம்.. ஈரலில் சேமிக்கப்படும் சர்க்கரை சக்தி உடலின் தேவைக்கு ஏற்ப இயல்பாக வெளிபட்டு ஈடுகொடுப்பதாக இருக்க வேண்டும்
ஈரல் மற்றொரு வேலையும் செய்கிறது.
உணவில் உள்ள உணவுக்கொழுப்பை உடலியக்கத்திற்கு உகந்த சக்தியாக மாற்றும் வேலையை ஈரல் மற்றும் பித்தப்பை செய்கிறது இயந்திரங்களில் பாகங்கள் தேய்ந்து விடாமல் தடுக்க எண்ணெய் பசை உதவி செய்வது போல் அதியடர்த்தி கொழுப்பு சக்தி உடல் இயக்கத்திற்கு உதவுகிறது. உழைப்பாளிகளுக்கு கொழுப்பு சக்தி அத்தியாவசிய தேவையாகும். ஆனால் சமூகத்தில் கொழுப்பு தவிர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது (உடல் உழைப்பு இல்லதவனுக்கு நுண் அடர்த்தி கொழுப்பு இரத்தக்குழாயில் படிந்து அடைப்பு ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுக்கும்)
.உடலாலும் மனதாலும் நம்மால் சுமக்க முடியாத உளைச்சலையும் வேலைபளுவையும் இந்த சமூக அமைப்பு நம்முள் திணிக்கிறது. அன்றாட வாழ்வில் பயமும் பதட்டமும் நிரந்தரமாக மாறி ஈரலுக்கு அதிக தாக்கம் தருகிறது. சர்க்கரை நோய் என்பது சமூகத்தின் தாக்கத்தால் உளவியல் அடிப்படையில் உருவாகும் உடலியக்க கோளாறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
.மனித சமுதாயம், எட்டு மணி நேரம் உழைப்பு, எட்டுமணி நேரம் உறக்கமும் ஓய்வும் இருக்க வேண்டும். எட்டுமணிநேரம் தன்நலப் பணிகளுடன் அகமகிழ்வு அனுபவிக்க வேண்டும். இந்த சமூக ஒழுக்கம் இருக்கும்போது மட்டுமே மனிதனின் மனநிலை சமநிலையில் இயங்கும்..
சீரான உடல் நலம் கொண்டவர் உடலில் நிகழ வேண்டிய செயல்கள்
1)உணவில் உள்ள சர்க்கரை சக்தி தேவையான அளவு மட்டும செரிமானம் நடைபெற வேண்டும், 2) உபரி சர்க்கரை சக்தியை ஈரல் சேமிப்பு செய்திட வேண்டும் 3) ஈரலில் சேமித்த சக்தி முறையாகவெளிப்படவேண்டும், 4) கணயத்தில் முறையாக இன்சுலின் வெளிப்பட்டு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் தன்மையை மாற்றி செல்களுக்குள் சேர்க்க வேண்டும் 5) செல்களில் சேர்ந்த சக்தி படைப்பு மற்றும் உற்பத்திக்கான உழைப்பில் ஈடுபட்டு சீராக எரிக்கப்பட வேண்டும்
இவை சரியாக நிகழாத போது சர்க்கரை நோயாளி என நாம் ஆகிறோம் ,
உலகத்தின் இயக்கமும், முன்னேற்றமும் மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் உழைப்பால் மட்டுமே நிகழ்கிறது. இந்த கோட்பாட்டை பொய்யாக்கி மனித உழைப்பு இல்லாமல் இயந்திரங்கள், கருவிகள்,வாகனங்களின் ஆதிக்கத்தில், மனிதர்களுக்கு வேலை வாய்ப்பும் உடல் உழைப்பும் இல்லாத சமூகத்தை உருவாக்கி, வணிக கோட்பாடு உலகத்தை ஆள்கிறது.
சர்க்கரை பணக்காரர்களுக்கு நோய்
நம்முன்னோர்கள் காலத்தில் செல்வந்தர்கள் வெள்ளைச் சர்க்கரையைஉபயோகித்தார்கள். கூலித்தொழிலாளிகளோ, தங்கள் சக்திக்கு ஏற்பகருப்பட்டி, வெல்லம் போன்றவற்றை உபயோகித்தார்கள். பணக்கார குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவும்,கூலித்தொழிலாளிகளின் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின்தாக்கம் குறைவாகவும் இருப்பதை மருத்துவ சோதனைகள் நிரூபித்துள்ளன. அதனால்தான் சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோய் என கருதப்பட்டது.
பணக்காரர்களின் நோய் எப்படி ஏழைகளின் நோயாகவும் மாறியது.
கருப்பட்டி, வெல்லம் உள்ளூரில் விவசாய தொழிலாளர்களே தயாரித்தனர். பெரிய முதலாளிகளின் ஆலைகளில் சர்க்கரை தயாரிக்கப்பட்டதால் சர்க்கரை உற்பத்தியை அதிகரித்து லாபம் ஈட்ட கருப்பட்டி வெல்லம் உண்ணும் பண்பாட்டை அழித்து, அனைவரும் வெள்ளை சர்க்கரை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் அதன்பின்னர் கருப்பட்டிக்குப் பதிலாக வெள்ளைசர்க்கரையை பாமர மக்களும் உபயோகப்படுத்த கட்டாயத்திற்குள்ளானார்கள். அதன்விளைவுதான் சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும்நிலையாக மாறியது
சர்க்கரை நோய்க்கான சமூக சூழல்
அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் நிறைய வேலைகளை குறைவான ஆட்களை நியமித்து பதட்டத்துடன் வேலை வாங்குகிறார்கள். இதனால் ஈரல் தூண்டப்பட்டு சர்க்கரை வெளியாகி இரத்தத்தில் கலக்கிறது ஆனால் அவை எரிக்கப்படுவதில்லை.
சமுதாயத்தில் படித்து தகுதி பெற்ற இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் வெறும் உடலை சுமந்துகொண்டு வாழ்கிறார்கள்.அவர்கள் உண்ட உணவு சக்தி என்ன ஆவது.
மகிழ்ச்சியின் அடையாளமாக ஸ்வீட் எடு கொண்டாடு என இனிப்பை தருவதும், காபி, டீ, மது அருந்தி ஈரலை தூண்டி சர்க்கரையை வெளிகொணர்வதும் சமூக மரபாக்கிவிட்டார்கள்.
மாற்றுவழி என்ன ?
எவனோ ஒரு முதலாளிக்கோ அல்லது நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ மனப்பதட்டத்தோடு உழைக்கிறோம்.
உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்கும் உரிமை நமக்குண்டு. அல்லதுஊதியத்திற்குரிய வேலை இவ்வளவுதான் என்று வேலை நிறுத்தம்செய்யும் உரிமையும் நமக்குண்டு. சம்பள உயர்வு, போனஸ் கேட்டு போராடுவது போல் வேலை கலாச்சாரத்திற்காகவும் போராட வேண்டியுள்ளது. நமது வேலைகளுக்கேற்ற உணவு குறையின்றி உண்ண வேண்டும். உட்கொண்ட உணவிற்கேற்ற வேலைகள் செய்தாக வேண்டும்.
நமது உடல் உழைப்பை, நாமே நேசிக்க வேண்டும் ஆசைப்பட்டு அன்றாடம் நமது சொந்த வேலைகளில் வியர்வை வடிய ஈடுபட்டு மகிழ்வுற வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் நமது உழைப்பால் உடலுக்குள் சர்க்கரை சக்திஎரிக்கப்பட வேண்டும். காலையில் ஒரு மணிநேரம் நடைபயிற்சி,உடற்பயிற்சி, தியானம், யோகா மூலம் எனது உடலை சமநிலையில் பராமரிக்க முயல்கிறேன் என்பது நிரந்தர மாற்றத்திற்கு உகந்ததுஅல்ல.
கோ.சுரேந்திரபாபு / செல். 9444468670 email.friendsurender@gmail.com
No comments:
Post a Comment