ஒரு செல்வந்தர் தன் மூன்று மகன்களிடம் சில லட்சம் பணம் கொடுத்து நான் இமய மலைக்கு சென்று திரும்புவதற்கு முன்னர் முழு பணத்தையும் பயன்படுத்திட வேண்டும். அத்தோடு மட்டுமல்லாமல் அதன் பின்னர் என் பணத்திலிருந்து தொடர்ந்து செலவு ஏற்படும்படி அந்த பயன்பாடு இருக்க வேண்டும். நீங்கள் என் பணத்தை பயன்படுத்திய வழியையும் தொடரப்போகும் செலவினத்தை பற்றியும் நேரில் பார்த்தபின்னரே உங்களுக்கு என் சொத்துக்களை தருவேன் என கூறிச்சென்றார்.திரும்பி வந்து மூன்று மகன்களிடமும் கேட்டார் .
முதல் மகன் தன் வீட்டின் தோட்டத்தையும், மரங்களையும் அழித்து பெரிய வீடு கட்டி முழுவதும். குளிர்சாதனவசதியோடு அமைத்திருந்தார் அத்தோடு கார், டீ.வி, பிரிட்ஞ்,
மிக்சி, கிரைண்டர், ரேடியோ என எல்லா பொருட்களையும் காட்டினான். அப்பா ! இந்த நுகர்வுப்பொருட்கள் என்னை
குதூகலப்படுத்துகிறது அதே சமயம் அவற்றால் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் மின்கட்டண செலவுகள் வரும் என்றான். உங்கள்
கட்டளைப்படி செய்துள்ளேன் எனக்கு சொத்தினை தாருங்கள் என்றான்
அப்பா அதை கேட்டுவிட்டு அடுத்த மகனிடம் கேட்டார்.
இரண்டாவது மகன் தன் வீட்டுடன் சேர்த்து பெரிய கோவிலை கட்டிவைத்திருந்தான் அதைக் காட்டி .இந்த கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜை நடக்கிறது மதியம் அனைவருக்கும் இலவசமாக அன்னதானம் அளிக்கப்படுகிறது தினமும்
தானம் தருமம் செய்கிறேன் அதனால் நிறையவே செலவாகிறது. இதில் எனக்கு ஒருவித ஆன்மீக
மகிழ்ச்சி கிடைத்துள்ளது என்றான்.. இந்த செலவு தொடர்ந்து நீடிக்கும் என்றான். நீங்கள்
சொன்னபடி செய்துள்ளேன் சொத்துக்களை எனக்கு தரவேண்டும் என்றான்
அப்பா அதையும் கேட்டு சிரித்தபடி மூன்றாவது மகனிடம் போனார்.
அப்பா, நீங்கள் கொடுத்த
பணத்தில் நான் சிற்பக்கலை, ஓவியக்கலை
மற்றும்
இலக்கியப்படைப்புக்கான பயிற்சிகளும் பெற்றுக்கொண்டேன்.
அதில் புதிய படைப்புகளையும் உற்பத்தியும் செய்கிறேன். அவ்வாறு செய்யும்போது உடலில்
சிக்கல்களும் சிரமங்களும் ஏற்பட்டு ஓர் இதமான வலியையும் அனுபவிக்கிறேன். இது
எனக்கு பிடித்திருக்கிறது. இதை உங்கள் பணத்தைக்கொண்டு நான் உருவாக்கிக் கொண்டேன். உங்களுக்கு என் நன்றி. இனி எனது புதிய படைப்புக்கான மூலப்பொருட்களை வாங்க உங்கள் பணத்திலிருந்து தொடர்ந்து
செலவிட வேண்டும். என் உழைப்பினால் நிறை படைப்புகள் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்,
அதன்மூலம் வரும் செல்வம் எனக்குப்போதும். உங்கள் சொத்தில் பங்கு, எனக்கு வேண்டாம் என கூறினான்.
நமது சமூகத்தில் இதே போல், மூன்றுவகை கோட்பாடுகளில்
வாழ்கிறோம்
.பொருட்களின் நுகர்வுக்கலாச்சாரத்தால் பொன், பணம், பொருள், நிலம்,என சொத்து சேர்க்க அலைபாய்கிறோம். இது பொருள் அடிப்படையிலான வாழ்க்கை முறை. இதற்காக பல உணர்வுகளை நாம் அழித்துக் கொள்கிறோம், இழக்கிறோம்.
.பொருட்களின் நுகர்வுக்கலாச்சாரத்தால் பொன், பணம், பொருள், நிலம்,என சொத்து சேர்க்க அலைபாய்கிறோம். இது பொருள் அடிப்படையிலான வாழ்க்கை முறை. இதற்காக பல உணர்வுகளை நாம் அழித்துக் கொள்கிறோம், இழக்கிறோம்.
அடுத்தது காதல், காமம், ஆசை, பாசம், நட்பு, கடவுள் நம்பிக்கை, ஆன்மீகம்
என்ற உணர்வு சார்ந்த அகமகிழ்வு அனுபவிப்பதை அடிப்படையாக கொண்டது. கடவுளை கண்ணால்
காண முடியாது அது மனதால் உணரக்கூடிய அனுபவ சுகம். இது உருவமோ வடிவமோ இல்லாத உணர்வு வாழ்க்கை முறை. அதை அனுபவிக்க பணத்தையும் பொருட்களையும் இழக்க
சம்மதிக்கிறோம்.
மூன்றாம் வழி; நமக்குள்
இருக்கும் உழைப்புத்திறனை பயன்படுத்தி பிறருக்கு
அகமகிழ்வு தரும் படைப்புகளையும் பொருள் உற்பத்தியையும் இந்த சமூகத்திற்கு
தருகிறோம். அப்படிப்பட்ட செயலில் ஈடுபடும்போது ஏற்படும் வலியையும் எதிர்ப்புகளையும் சந்திப்பதில் இதமான சுகத்தை
அனுபவிக்கிறோம்.
எனக்குள் இருக்கும் உழைப்பாற்றலை இந்த உலகிற்கு அளிக்க வாய்ப்பும்
வசதியும் எனக்கு இருக்க வேண்டும். இந்த உலகில் உருவாக்கப்படும் அனைத்து பொருட்களை அடையவும் அனுபவிக்கவும்
உரிமையும் சுதந்திரமும் எனக்கு இருக்க வேண்டும்.என்பது வாழ்வின் இலக்காக உள்ளது.
நமது எதிர்ப்பார்ப்புகளையும் வாய்ப்புகளையும் அடைய ஒவ்வொரு கணமும் போராடுவதில் சுகம் இருக்கிறது. அந்த சவால்களை கடக்கும் போது உடல் மற்றும் மனதாலும் நிறைவு ஏற்பட்டு மகிழ்வுறுகிறோம். இந்தப் பாதையில் பொருள் பெறுகிறோம் மற்றும் உணர்வும் அனுபவிக்கிறோம்
மூன்றாம் கோட்டாபாடான இந்த வாழ்க்கைமுறையில் ,மூளை, மனம், உடல் மூன்றும் இணைந்து அனுபவிக்கும் சுகம் உள்ளது. இப்படி வாழ்வதே நிறைவான வாழ்வியல் முறையாகும்.
இதுவே உலகில் மனித இனம் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களையும் இயற்கையின் இயக்கத்தையும் பாதுகாக்கும்.
நமது எதிர்ப்பார்ப்புகளையும் வாய்ப்புகளையும் அடைய ஒவ்வொரு கணமும் போராடுவதில் சுகம் இருக்கிறது. அந்த சவால்களை கடக்கும் போது உடல் மற்றும் மனதாலும் நிறைவு ஏற்பட்டு மகிழ்வுறுகிறோம். இந்தப் பாதையில் பொருள் பெறுகிறோம் மற்றும் உணர்வும் அனுபவிக்கிறோம்
மூன்றாம் கோட்டாபாடான இந்த வாழ்க்கைமுறையில் ,மூளை, மனம், உடல் மூன்றும் இணைந்து அனுபவிக்கும் சுகம் உள்ளது. இப்படி வாழ்வதே நிறைவான வாழ்வியல் முறையாகும்.
இதுவே உலகில் மனித இனம் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களையும் இயற்கையின் இயக்கத்தையும் பாதுகாக்கும்.
நமது நாட்டின் அரசியலில் உள்ள பிரிவுகள்
1)பொருடைமைவாதிகள், (அதிகார
அரசியல்)
2)ஆன்மீகவாதிகள் (மதவாத அரசியல்)
3)பொதுவுடைமைவாதிகள்
(இடது சாரி அரசியல்)
என்ற மூன்றுவழி அரசியல்கோட்பாடுகள் போட்டி களத்தில் உள்ளன. இதில் யார்
தோற்கிறார்கள் எவர் வெல்கிறார்கள் என்பதை வேடிக்கை பார்க்கும் ஊமைப் பார்வையாளர்களாக
மக்கள் இருக்கிறார்கள்.
இம்மூன்று கோட்பாட்டில் எதை அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும்
என்பதில் விழிப்புணர்வும் தனக்கு தேவையானதை தீர்மானித்து தேர்ந்தெடுக்கும் துணிச்சலும்
மக்களுக்கு தேவைப்படுகிறது
மூன்று கோட்பாடுகளை புரிந்துகொண்டவர்கள், அந்த தகப்பன் யாருக்கு தன் சொத்துக்களை தர வேண்டும் என்று தீர்ப்பு சொல்ல முடியும்.
கோ.சுரேந்திரபாபு. உதவி ஆணையர் (ஓய்வு) செல்பேசி 9444468670. Email: friendsurender@gmail.com

இந்தியாவை பொறுத்த வரை முதல் இரண்டு கோட்பாடுகளும் மாறி மாறி அரசு அதிகாரத்தை பங்கு போட்டு கொள்வதில் கறாராக இருக்கிறார்கள். பொது மக்கள் மூன்றாவது கோட்பாடுக்கு போய்விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகவும் இருக்கிறார்கள்.
ReplyDelete