தீக்கதிர் நாளிதழின் வண்ணக்கதிர் இணைப்பு பிரிவில் 2-8-2015 அன்று சர்க்கரையின் இனிப்பும் சமூகத்தின் திணிப்பும் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை.---கோ.சுரேந்திரபாபு எல்லா மனிதருக்கும் மனதில் ஆசைகள், இலக்குகள், அதனை நிறைவேற்ற திட்டங்கள் இருக்கும். அந்த திட்டங்களை செயல்படுத்துவது உடல் உறுப்புகள். உடலை இயக்குவது நமது உடலின் செல்களும் திசுக்களும் ஆகும்.நாம் உண்ணும் உணவில் உள்ள சக்தியை செரிமான உறுப்புகள் நமக்குள் இருக்கும் திட்டங்களை செயல்படுத்த எவ்வளவு சக்தி தேவையோ அதை எடுத்து இரத்தத்தில் செர்க்கிறது.இரத்தத்தில் செர்ந்த சர்க்கரை சக்தியை கணையம் சுரக்கும் இன்சுலின் அந்த சக்தியை தன்மையை மாற்றி செல்களில் செர்க்கிறது. இது இயற்கையின் உடல் இயக்கம் ஆகும்.
நாம் செயல்படுத்த முடியாத கனவுகள் திட்டங்களை வைத்திருக்கும்போது செரிமான உறுப்புகள் நமது எண்ணங்கள் மற்றும் திட்டங்களுக்கு தேவையான் உணவுச்சக்தியை எடுத்து இரத்தத்தில் சேர்க்கின்றது. செல்களுக்கும், திசுக்களுக்கும் அந்த அளவுக்கு வேலையை உடல் உறுப்புகள் தராமல் இருக்கும் போது அந்த சக்தியை சேல்கள் இரத்தத்திலிருந்து உள்வாங்காமல் நிராகரித்துவிடும்.செல்களால் ஏற்றுக்கொள்ளாத சர்க்கரை சக்தி இரத்தத்தில் தங்கிவிடுகிறது.உடல் உறுப்புகள் உழைப்பில் ஈடுபட்டு செல்களுக்கும் திசுக்களுக்கும் வேலை கொடுத்தாலன்றி செல்கள் இந்த சக்தியை உள்வாங்கிக்கொள்ளாது. தனக்கு இது தேவையற்றது என நிராகரித்துவிடுகிறது.
இதனால் இதன் அடிப்படையில் கணையமும் இனி செல்கள் சக்தியை ஏற்காத நிலையில் இன்சுலீன் சுரப்பதை நிறுத்திக் கொள்கிறது. இந்த தருணத்தில் செயற்கையாக இன்சுலின் ஊசி மூலம் உடலில் செலுத்தி வலுக்கட்டாயமாக செல்களுக்குள் சக்தியை திணிக்கிறோம். தனக்கே வேலை இல்லை இந்த நிலையில் உபரியாக உள்ளே வரும் சக்தியை மற்ற செல்களும் திசுக்களும் அந்ந சக்தியை கருங்காலிகளாக ஒதுக்கிவிடுகின்றன.
வளமான விளைச்சல் நிலத்தில் பயிரிடப்படாத பகுதிகளில் களைகளும் புல் பூண்டுகள் முளைப்பது போல அந்த உபரி சக்தி நாளடைவில் செல்களுக்கு ஊடாக புற்றுநோய் கட்டிகளாக உருமாற்றம் பெற்றுவிடுகின்றன. அப்புற்றுநோய் செல்களுக்கு வேலை இல்லை. இவை இயல்பாக உள்ள உடல் செல்களிடமிருந்த சக்தியை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன.இயற்கை செல்களில் ஒரு கருமட்டும் இருக்கும் கேன்சர் செல்களில் வடிவம் வேறாகவும் இரட்டை கருவும் இருக்கும். நாம் உண்ணும் உணவில் உள்ள சக்தியை இந்த புற்று செல்களை ஒட்டுண்ணியாக தின்னும். எனவேதான் புற்றுநோய் உயிர்க்கொல்லி நோயாக கருதப்படுகிறது.சமூகத்தில் எந்த நிறுவனமும் சிறிய வேலைக்கு கூட பதட்டமும் மன அழுத்தமும் தந்து வேலை வாங்கும் கலாச்சாரம் பின்பற்றுகின்றன. இதனால் மனம் அதிகமாக வேலை செய்கின்றது அந்த அளவுக்கு உடலுக்கு வேலை இருப்பதில்லை.பதட்டம் பொக்க காபி டீ மது குடிக்கிறோம்.வேலைபளு உள்ளது என்ற கணிப்பில் உண்ணும் உணவிலிருந்து அதிக சக்தியை சேரிமான உறுப்புகள் எடுத்து கொள்கிறது.
சர்க்கரை நோய் என்பது தனிமனிதர்களின் நோய் அல்ல இது வேதிப்பொருள் கலப்பு உணவுகள், குடிநீர், காற்று அனைத்தும் நச்சு கலந்துள்ள சமூக சீர்குறைவினால் எற்படுத்தப்பட்ட சமூக ஒழுங்கீன வாழ்க்கைக் கலாச்சாரத்தால் உடல் இயக்கம் சீர்கெட்டுபோவதால ஏற்படுகிறது.
1)உணவில் உள்ள சர்க்கரை சக்தி தேவையான அளவு மட்டும செரிமானம் நடைபெறுதல், 2)உபரியாக உள்ள சர்க்கரை சக்தியை ஈரல் சேமிப்பு செய்தல், 3) ஈரலில் சேமித்த சக்தி முறையாக தேவைப்படும் போது மட்டும் வெளிப்பட்டு பயன்படுதல், 4) கணயத்தின் முறையான சுரப்பின் காரணமாக இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் தன்மையை மாற்றி செல்களுக்குள் சேர்ப்பது 5) செல்களில் சேர்ந்த சக்தி உடலின் ஆக்கப்பூர்வமான படைப்பு மற்றும் உற்பத்திக்கான உழைப்பால் எரிசக்தியாக செலவாவது,உடலை இயக்கி சக்தியை எரிப்பது என்றது வெறும் உடல் உறுப்புகளை இயக்குவதுமட்டுமல்ல.உடலின் உறுப்புகள் ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பிலோ உற்பத்தியிலோ ஈடுபட்டு அந்த படைப்பிற்கான வேகுமானத்தை பெற்று அகமகிழ்வும், மனநிறைவும் பெற வேண்டும்.உடலின் சக்தி அகமகிழ்வு தரும்மனமநிலை மற்றும் இதமான சுகம் தரும் உடல்உழைப்பு இரண்டும் சேர்ந்து இயங்கி அதன் மூலம் உடலின் சக்தி எரிக்கப்பட வேண்டும். எந்த படைப்போ உற்பத்தியோ இல்லாமல் மனநிறைவும் ஏற்படுத்தாத இயந்திரத்தனமான உடற்பயிற்சி நடைபயிற்சி, தியானம், யோகா பயிற்சிகள் நிர்ந்தர பயன் தராது.
சமூக கொட்பாடே ஒழுக்கமும் நேர்மையும் கொண்ட பண்பாடாகவும் வழக்கங்களாகவும் இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது. சமூக அளவில் நாம் ஒழுங்கீனமான வாழ்கையை வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாய சூழலில் வாழ்கிறோம்.நவீன ரக இயந்திரங்கள் கருவிகள் புறச்சூழலை மாசுபடுத்தும் உற்பத்திச்சாலைகள்,வேதிப்பொருட் களால் ஆன உணவுப்பொருட்களை கட்டாயமாக உண்ண வேண்டிய நிலை, சுவாசிக்கும் காற்று குடிநீர் யாவும் நச்சு கலந்துள்ளதாக உள்ளது. சமூகமே தறிகெட்ட ஒழுங்கற்ற முறையில் அமைந்தவிட்டதால் தனது நியாயமான ஆசைகளை நேர்மையான வழியில் சென்றும் நிறைவேற்றிக்கொள்ள முடியாத மனிதர்கள் தடம் மாறவேண்டிய கட்டாய சூழலுக்கு உள்ளாகிறார்கள்.அதுவே அவர்களின் மனநிலையை பாதிக்கிறது.சிலர் தீய சக்திகளாக மாறி சமூகத்தை பழிவாங்க முயல்கிறார்கள்.பலர் தங்களின் ஆழ்மனதின் பாதிப்பால் பல உடல்நிலை குறைபாடுகளுக்கு உள்ளாகிறார்கள்.மனநிலை கோளாறுகாளால் தோன்றும் உடல் இயக்க கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள்.இதில் நோய் கிருமிகள் இருக்காது தொற்றுநோயாக இருக்காது மனம் சார்ந்து உடலியக்க கோளாறுகளால் பல துயர்கள் மனித உடலை ஆட்படுத்துகிறது
நமது சமூக அமைப்பில் நோய்கள்யாவும் வணிக மூலப்பொருளாக மாறிவிட்டது.சர்க்கரை நோய் ஒன்றை வைத்து எத்தனை வணிகம் நடக்கிறது என பார்க்கலாம். மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாமல் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் சோதிக்கும் சோதனை மையங்கள் அதில் பல வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் சாதனங்கள் நமது பணத்தில் வாங்கப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தியாகும் ராகி கம்பு திணை சாமை வரகு அரிசி ரகங்கள் இருக்கும் போது வெளிநாட்டிலிருந்து ஓட்ஸ்,காய்கனிகள் இறக்குமதி செய்து வணிகமாக்குவது.. செருப்பு முதல் கைத்தடி வரை சர்க்கரை நோயாளிக்காக மருத்தவமனையிலேயே வைத்து வியாபாரம் நடத்தப்படுகிறது. இவ்வாறு எல்லா நோயும் வணிகலாபத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. சமூக முழுவதுமான அளவில் வணிக லாபத்தில் சிறைபட்டுள்ளது. தனிப்பட்ட மனிதனாக முயன்று இதற்கு தீர்வு கண்டு விடுதலை பெற முடியாது சமுதாயம் முழுவதும் சிதைந்து சிக்குண்டு உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
அனைத்து உலகமும் வணிக லாப வேட்டையாடும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பெரும் முதலாளிகளின் குடும்பங்களின் வசம் அடிமைப்பட்டு உள்ளது.அவர்கள் எப்படியெல்லாம் இந்த இயற்கை பூமியை சீரழிக்க முடியுமோ அப்படியெல்லாம் அழித்து கட்டிடங்களாகவும் இயந்திரங்கள் வாகனங்கள் மற்றும் சாதனங்கள் கருவிகளின் காடாக இந்த பூமியை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்..இவர்களிடமிருந்து மனித இனத்தை மட்டுமல்லாமல் இவர்களின் செயலால் அழிந்துவரும் எல்லா உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டிய போர் நடத்த வேண்டியுள்ளது. உடல் மற்றும் உளவியல் நோய்கள் என்பது தனிமனிதனின் பிரச்சினை அல்ல அது உலக அளவில் மனித உடல் உழைப்பை நிராகரிப்பதால் உருவாகும் சமூக பிர்ச்சினை என உணர்ந்து செயல்பட வேண்டும். ஆசைகளை கட்டுப்படுத்து என சமூகத் தீர்வை மதவாதம் ஆன்மீகத்தை கோட்பாடாக வைத்திருக்கும் இயக்கங்களோ, பணம், சொத்து, செல்வம் சேர்கும் ஆசையை தூண்டி பொருளாதார சந்தையில் பந்தையக்குதிரைகளாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வியல் கொட்பாட்டை கொண்டுள்ள வணிக சமூகமோ செய்யாது. உழைப்பை நம்பிவாழும் பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போர் மூலம் மட்டுமே இதற்கான தீர்வும் மாற்றமும் ஏற்படுத்த முடியும். இது பலமான எதிர்ப்பு வந்தாலும் நிச்சயமாக நிகழக்கூடியதே.
கோ.சுரேந்திரபாபு…,B.A.,D.I HOM. (LONDON). உதவி ஆணையர் (ஓய்வு) தமிழ்நாடு அரசு.. செல் பேசி 9444468670 தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சென்னை. பெரம்பூர் கிளை பொருளாளர்.
No comments:
Post a Comment