தனிமையின்
துணையோடு ----கோ.சுரேந்திரபாபு
என் செல்ல மகனே நீ சின்ன வயதில்
சிணுங்கி அழுதாலும் தாங்க மாட்டாள் உன் தாய்
நள்ளிரவில் நீ நனைத்திடுவாய் படுக்கையை
இரவின் குளிரில் ஈரத்துணியை துவைப்பாள்
அன்பின்கதகதப்பால் அரவணைப்பாள் உன்னை
சிணுங்கி அழுதாலும் தாங்க மாட்டாள் உன் தாய்
நள்ளிரவில் நீ நனைத்திடுவாய் படுக்கையை
இரவின் குளிரில் ஈரத்துணியை துவைப்பாள்
அன்பின்கதகதப்பால் அரவணைப்பாள் உன்னை
நீ நடந்தால் உன் முழங்கால் வலிக்கும்
நீ நின்றால் உன் பூப்பாதம் நோகும்.
உன்கண்ணில் தூசி விழுந்தால்
அவள்கண்கள் கலங்கும்.
ஆடினாய் பாடினாய்
அழகாய் பேசினாய்
பெரிதாய்படித்தாய்
பெருமைப்பட்டோம்.
நீ நின்றால் உன் பூப்பாதம் நோகும்.
உன்கண்ணில் தூசி விழுந்தால்
அவள்கண்கள் கலங்கும்.
ஆடினாய் பாடினாய்
அழகாய் பேசினாய்
பெரிதாய்படித்தாய்
பெருமைப்பட்டோம்.
மகனே
உன்னை நாங்கள் தொடும்தூரத்தில் .
தொலைத்துவிட்டு தேடுகிறோம்
அயல்நாட்டு நிறுவனம் அள்ளும் லாபத்திற்கு
அல்லும்பகலும் அயராது உழைத்து
அழிவை அணைக்கிறாயே
தூரத்தில் இருந்தாலும் தெரிகிறது மகனே இரவு முழுவதும் எங்கோ இருக்கும்
எவனோ ஒருத்தனுகாய்
உன்னை நாங்கள் தொடும்தூரத்தில் .
தொலைத்துவிட்டு தேடுகிறோம்
அயல்நாட்டு நிறுவனம் அள்ளும் லாபத்திற்கு
அல்லும்பகலும் அயராது உழைத்து
அழிவை அணைக்கிறாயே
தூரத்தில் இருந்தாலும் தெரிகிறது மகனே இரவு முழுவதும் எங்கோ இருக்கும்
எவனோ ஒருத்தனுகாய்
வேலைகள்முடித்து
விடிந்தத பின்னர் வீட்டிற்கு வந்தாய்
எரிந்து விழுந்தாய் எங்கள்மேல்
விடிந்தத பின்னர் வீட்டிற்கு வந்தாய்
எரிந்து விழுந்தாய் எங்கள்மேல்
எங்கள் அவதிக்குமருந்திட
இயலாநிலையில் நீ உன்வலியை உணர்ந்தோம்
அன்பாய் நீயிருக்கிறாய்
அவதியை நாங்கள்
அனுபவிக்கிறோம்
இயலாநிலையில் நீ உன்வலியை உணர்ந்தோம்
அன்பாய் நீயிருக்கிறாய்
அவதியை நாங்கள்
அனுபவிக்கிறோம்
பாலூட்டி சோறூட்டி
பாசம்காட்டி பகல்இரவாய்
பாதுகாத்து
பன்னாட்டு காரனுக்கு
அடிமையாக்க
அன்புமகனே உன்னை
அர்ப்பணித்து விட்டோம்
பாசம்காட்டி பகல்இரவாய்
பாதுகாத்து
பன்னாட்டு காரனுக்கு
அடிமையாக்க
அன்புமகனே உன்னை
அர்ப்பணித்து விட்டோம்
தவப்புதல்வனே உன்
மனவலியை காண்பதற்கு
மனவலிமை எங்களுக்கில்லை
மரணத்தின் மவுன ராகத்தில்
நாங்கள் அழுகின்றோம்
அது அடங்கும்வரை
ஆருயிர் மகனே
ஆயுளை முடித்திட தனிமையின் துணையோடு
முதியோர் இல்லத்தில்
மூச்சை விடுகிறோமே.
மனவலியை காண்பதற்கு
மனவலிமை எங்களுக்கில்லை
மரணத்தின் மவுன ராகத்தில்
நாங்கள் அழுகின்றோம்
அது அடங்கும்வரை
ஆருயிர் மகனே
ஆயுளை முடித்திட தனிமையின் துணையோடு
முதியோர் இல்லத்தில்
மூச்சை விடுகிறோமே.
கோ.சுரேந்திரபாபு –செல்பேசி 9444468670.
No comments:
Post a Comment