Tuesday, 13 October 2015

அரசியல் இல்லாத மனிதன் உண்டா

முகநூல் பதிவில் ஒருவர் அரசியல் இல்லாத நடுநிலை மனிதர்களோ இயக்கமோ எங்கும் இல்லையே ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார் அந்த பதிவிற்கு நான் இட்ட பதில் இதுவே.


அரசு + இயல் = இயல் என்றது கோட்பாடு அரசு என்பது ஆதிக்கம் செலுத்துவது.நம்மை பொருள் ஆசை மற்றும் உணர்வுத்தாக்கம் ஆகிய இரண்டு வகை கொட்பாட்டில் நாம் இயங்கி வாழ்கிறோம்.

சுருக்கமாக சொன்னால் அபகரிப்பது மற்றும்  ஆதிக்கம் செலுத்துவது என்ற இரண்டு தலைப்பில் அரசியல் கோட்பாடுகள் அடங்கும்

பணம், பொருள், சொத்துக்காக அலைபாய்ந்து பந்தயக்குதிரைகளாக ஓடுகிறோம் .பிறர் பொருளை அபகரிப்பது தப்பில்லை என்ற கோட்பாட்டை சமூக மரபாக ஏற்று வாழ்வது, இது ஒரு அரசியல் கொட்பாடு.

பொருளாதார ஆதிக்கம் செலுத்துவது(ஏழைப்பணக்காரன் வர்க்க அரசியல்)

மற்றொன்று 

மதம் சாதி, இனம் மொழி போன்ற உணர்வுகளுக்கு அடிமையாக்கப்பட்டு இயக்கப்படுகிறோம். இது மனிதர்களை உணர்வுகளால் ஆதிக்கம் செலுத்தி ஆள்வது.

இந்த இரு கோட்பாடுகள்தான் நம்மை (அரசியலாக) ஆளுகிறது. 

மனிதர்களுக்கு பொருள் மற்றும் உணர்வுகள் சரியான விகிதத்தில் தேவைப்படுகிறது.

(உழைப்புக்கேற்ற ஊதியம் ,தேவைக்குரிய பொருட்கள்,அகமகிழ்வுக்கான பொழுதாக்க நேரம்.அமைய வேண்டும். இவை பொருள் சார்ந்த தேவை. அன்பு காதல் பாசம் காமம் தோழமை கருத்துப்பரிமாற்றம் போன்றவை ) 

கொடுப்பதும் பெறுவதும் ஏற்றுக்கொள்ளும் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற வாழ்வியல் கோட்பாடு மற்றும் மரபு சமூகத்தில் ஆளும் அரசியலாக இருக்க வேண்டும் என்பது மூன்றாவது அரசியல்.

இதில் எதையாவது நாம் சார்ந்திருப்போம் என்பதே உண்மை அரசியல்.

அரசியல் இல்லாத மனிதன் இல்லை.

No comments:

Post a Comment