மரணத்தின்
வலி உங்களுக்கு தெரியுமா ?---தீக்கதிர் நாளிதழ் 14-10-2015 அன்று வெளியான கட்டுரை
கோ.சுரேந்திரபாபு….. சென்னை
உயிருள்ள உங்களுக்கு மரணம் என்றால் என்ன என்று தெரியுமா? மரணத்தின் வலியை அனுபவித்துள்ளீர்களா. அந்த வலி உடலில் தோன்றுவதில்லை
உணர்வுகளால் அனுபவிப்பது
.நான் அதை அனுபவித்திருக்கிறேன்.
பல மருத்துவ சோதனைக்குள்ளானேன். நான் மவுனமாக இருந்தேன். மருத்துவர்,என்மனைவியை பார்த்து மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் . உண்மையை நான் சொன்னால்நீங்கள் அழுவீர்கள் .இது முற்றிலும் சரிபடுத்தக்கூடிய நோய்தான் ஆனாலும்……..
புற்றுநோய் ஓர் உயிர்க்கொல்லி நோய் அது உன்னை பிடித்துள்ளது என சொல்லாமல் மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார்.அனைத்தையும் கேட்டுக்கொண்டு
வீட்டிற்கு திரும்பினோம் .
என் முடிவுநாள் அருகில் உள்ளது நான் நிறையவே செய்து முடிக்க
வேண்டியுள்ளது.
இரவு முழுவதும் கணினி முன்னால் அமர்ந்து தட்டச்சு செய்து கொண்டிருப்பது
என் மனைவிக்கு மேலும் கவலை அளித்தது. நான் எழுதியது மரண சாசனம் அல்ல.
அறிந்தவற்றில் சிலவற்றை எழுதினேன். .
உடலில் தளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமானது.பேச்சின் வேகமும் நம்பிக்கையும் மழுங்கிப் போனது.வீட்டில் பலர் இருந்தார்கள் நான் தனிமையில் இருப்பதாக
உணர்ந்தேன்.
பிறப்பதற்கு முன் தாயின்
கருவறையில்
இருக்கும் இருட்டை கண்டேன் சாவுக்குப் பின்னர் உருவாகும் மயான அமைதியை அனுபவித்தேன்.
இதிலிருந்து என்னை
விடுவித்தவர்கள் ,அப்பல்லோ புற்றுநோய் சிறப்பு
மருத்துவமனையில் அக்கரையோடு
எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் என்னை கனிவுடன் கவனித்து
குறைந்த ஊதியத்தில் பணியாற்றிய என மகள்களின் வயதும் பாசமும் கொண்ட
செவிலியர்கள்.
புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டேன். சிகிச்சை பெற்ற காலத்தின் அனுபவத்தை சமுதாயப்பார்வையோடு ஒப்பிட்டு பார்த்தேன்.சில சமூக கோட்பாடுகளும்
பொருளாதாரமும், அரசியலும் அதில் மறைந்திருப்பதை உணர்ந்தேன்.
மருத்துவம்
என்பது உயிர்களை அழிவிலிருந்து காக்க வேண்டும் .மருத்துவர் மனிதநேயம் மற்றும் சமூக சேவை மனப்பான்மை கொண்டவராக இருக்கவேண்டும்.நவீன மருத்துவம்
மேலோட்டமாக பார்த்தால்
இவ்விரண்டும் இருப்பதாகவே தெரிந்தது ஆழ்ந்து
பார்த்தால்.
மருத்துவத்துறை முற்றிலும்
லாபநோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தும் வணிகமாக
இயங்குவதை அனுபவத்தில் பார்த்தேன்.
மருத்துவ ஆராய்ச்சிகள் உயிர்களின் பாதுகாப்பிற்காக என்ற நோக்கத்தைவிட வணிகலாபம் ஈட்டுவதற்கான மூலதன தொழிலாக உள்ளது .மருத்துவக்கல்லூரியில் படிக்கும் போது
மனித உடலை புத்தகம்போல் படிக்க உடற்கூறியல்,(ANOTOMY) உடற்கூறு இயங்கியல் (PHYSIOLOGY)
மற்றும் உடற்கூறு இயக்கச்
சிதைவுகள் (PATHOLOGY) பிணக்கூறு ஆய்வியல் (POSTMORTOM) கற்கும் மருத்துவர்கள்
அந்த அறிவாற்றலை தன் முன்னால் உள்ள நோயாளியின் உடலியக்கத்தை நேரில் பார்த்தும் தொட்டும் கேட்டும் கணிப்பதில்லை.
மாறாக கணினிமயமாக்கப்பட்ட நவீன இயந்திரங்களைப் பார்த்து அவை
காட்டும் ஒலி ஒளி வரிவடிவ அலைவடிவ மற்றும் நிழற்பட அடையாளங்களை படிக்கிறார்கள் . நோயாளியின் உடல் வலியையும், உளவியல் நிலையையும்
கணிக்கும் உணர்வுப் பூர்வமான அணுகுமுறை இங்கே இல்லை.
பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி
செய்து விற்கும் கருவிகள் காட்டும் அடையாளங்களை படிக்கும் மொழிபெயர்ப்பாளராக மருத்துவர்கள் மாறிவருகிறார்கள்.
நோய்க்குறிக்குரிய நோய்நீக்கி மருந்தையும் அதை தயாரிக்கும நிறுவனம் பற்றிய தகவலும் கணிப்பொறியில் பதிவாக்கப்பட்டுள்ளது. மருத்துவரின்
மூளையை இயங்கி நோயாளிக்கு
எது தேவையென தீர்மானிக்க உரிமையில்லை
மருத்துவர்களின் உழைப்பும் மூளைத்திறனும் நோயாளியின் கண்ணோட்டத்தில் இல்லை. அதிநவீன கருவிகள், சாதனங்கள், இயந்திரங்கள் காட்டுவதை சார்ந்து அவற்றை இயக்கவும் பின்பற்றவும்
வேண்டிய கட்டாயத்திற்குட்பட்ட மருத்துவ தொழிலாளர்களாக கடுமையாக உழைக்கிறார்கள்.
அதற்குரிய பணமும்
சம்பாதிக்கிறார்கள்.
நமது
பாரம்பரிய மருத்துவர்கள் அனுபவ அடிப்படையில் மனித உடலை சோதித்து இயற்கை மூலிகை
மருத்தினை தயாரித்து அளித்தார்கள். நோயாளியின் நாக்கின் நிறத்தையும், கண்ணின்
கருவிழி அசைவையும் பார்த்து நோயை கணித்தார்கள்.சிறுநீரின் நிறம் மலத்தின்
நாற்றம் உடலின் வெப்பம் போன்றவற்றை மருத்துவரே நேரில் கண்டு நோயின் தன்மையை
தலைமுறை தலைமுறையாக கண்டுபிடித்த அனுபவ அடிப்படையில் கணித்தார்கள்.ஒரு
நோயாளியின் பேச்சு உச்சரிப்பிலிருந்து அவரது மனநிலையை கணித்தனர்.
தற்போது மனித உடற்கூறையும் அதன் உள் நிலை இயக்கங்களையும் காட்டும் இயந்திரங்கள்
தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. . மனித இனத்தின் நோய்பற்றியும் அதனை குணப்படுத்தும்
முறைகளும் செயற்கை மருத்துவ பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களின்
கட்டுப்பாட்டில் உள்ளது.
நமது முன்னோர்கள் வளர்த்த இயற்கை மருத்துவ அறிவியலை பின்பற்ற
இன்றைய நவீன மருத்துவர்களுக்கு பயிற்சி இல்லை. உரிமையும் இல்லை..மருத்துவம் படிக்கும்
மருத்துவர்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கருவிகளையும், செயற்கை
வேதிப்பொருட்கலவை மருந்துகளையும் பயன்படுத்த தெரிந்தவர்களாக மாறித்தான்
ஆகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அன்றாடம் நாம் உண்ணும் உணவில்
நோய்தீர்க்கும் மருத்துவ குணமுள்ள இஞ்சி சுக்கு மஞ்சள் வேம்பு மிளகு
திப்பிலி கீரைவகைகளின் பெயரை கூறுவது கூட குற்றமாக உணரும்படி மனமாற்றம்
செய்யப்பட்டுள்ளார்கள். உலகளவில் இயங்கும் மிகப்பெரிய லாபம் ஈட்டும் வணிக நிறுவனங்களிடம் மருத்துவத் துறையில் எதையும் தீர்மானிக்கும் உரிமையும்,ஆளுமையும் உள்ளது.இதில் ஈடுபட்டு உழைப்பவர்கள் பலர்
உள்ளனர்.அவர்களின் உழைப்பால் உருவாகும் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிப்போக்கில் நன்மைகள் இருக்கலாம்தவறுகளும் நிகழலாம்.அவற்றை எதிர்க்கவோ மாற்றவோ
அவர்களுக்கு உரிமை கிடையாது. அவர்களின் படைப்பில் ஏற்படும் குறைநிறைகளை இந்நிறுவனங்கள்
கூர்ந்து கண்காணித்து திருத்தங்களையும் செய்துவருகின்றன.
அந்த நிறுவனங்கள் மனிதநேயமற்றது
என்று கொச்சைப்படுத்தவும் முடியாது. மனித நலனில் இக்கரை கொண்டிருந்தாலும்.
இவைலாப நோக்கமே முழு முதற்குறிக்கோளாக
உள்ள அளவில் முழு ஆதிக்கத்தில்
இயங்கும் தனியார்நிறுவனங்கள் இயக்குகின்றன. இவர்கள் தங்கள் லாப வேட்டைக்காக இயற்கைக்கு மாறாக உலகை
மாற்றுகிறார்கள். இத்தகைய மருத்துவ அறிவியல்வளர்ச்சி மிக வேகமாகவும் வியப்பளிக்க வைப்பதாகவும் உள்ளது. இந்த போக்கு ஆபத்தானது.
பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இயந்திரங்களை
பயன்படுத்தி பணம் பண்ணுவதே மருத்துவ மனைகளின் வியாபாரம் என மாறிவிட்டது. இனி பணம்
இல்லாமல்; ஆரோக்கியமாக வாழ முடியாது என்ற நெருக்கடி நிலைக்கு மக்கள்
ஆளாக்கப்படுகிறார்கள். இதற்கு உதவும் வழியாக தனியார் மருத்துவக்காப்பீட்டு
நிறுவனங்கள் மக்களிடமிருந்து கோடிக்கணக்கில் நிதியை திரட்டுகிறது.
மருத்துவக்காப்பீடு உள்ளவரால் மட்டுமே மருத்துவம் பெற முடியும் என்ற கட்டாய
சூழல் உருவாகிவருகிறது. அடிப்படை தேவைகளுக்காக இல்லாவிட்டாலும்
மருத்தவ காப்பீட்டிற்காக பணம் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது
.மருத்துவ காப்பீடு பற்றி கவர்ச்சியான விளம்பரங்கள் தகவல்கள் மக்களிடையே
பரப்புரை செய்யப்படுகிறது. அனுபவப்பட்ட பின்னரே அவை உண்மையில்லை என தெரிகிறது.
இந்தியாவில் நிதிமூலதனம்,, கல்வி, மற்றும் மருத்துவம் ஆகிய
மூன்றின் அரசியல் ஆளுமை அந்நிய நாட்டின் ஆதிக்கத்தில் போகின்றது. நம் நாட்டின்
அரசியல் இறையாண்மை மற்றும் பொருளாதார கட்டமைப்பின் குரல்வளை அயல் நாட்டு
நிறுவனங்களால் இறுக்கப்படுகிறது. அதன் மரண வலியை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா
அது உடலால் அறிவதல்ல உணர்வுகளால் அனுபவிக்கப்படுவது. என் தேசத்தின் மரணவலியை
நான் அனுபவிக்கிறேன். வெறும் விமர்சனங்ளையும்
குற்றச்சாட்டுகளையும் கூறிக்கொண்டே போவதால் மாற்றம் நிகழாது.
மனித இனம் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்கள் மற்றும் இயற்கையின்
இயக்கவியலின் போக்கினை முன்நோக்கி நகர்த்திச்செல்லும் பரிணாம வளர்ச்சிக்கு உதவக்கூடிய மாற்றுப்பாதைபற்றி ஆராய்வதே அறிவுடைமை ஆகும். இதற்கான
விழிப்புணர்வையும் எழுச்சியையும் மக்களிடையே ஏற்படுத்தியாக வேண்டும்.
கோ.சுரேந்திரபாபு. / செல் பேசி 9444468670
உதவி ஆணையர்(ஓய்வு) வணிகவரித்துறை / தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் பெரம்பூர் கிளை
பொருளாளர்.
|
No comments:
Post a Comment