ஆசைகளே
இலட்சியம் அல்ல !கோ.சுரேந்திரபாபு, சென்னை செல்பேசி 9444468670.
நான் எழுத்தாளராக வேண்டும் ஓவியராக வேண்டும் நடிகனாக வேண்டும்
என்று சமூக அரங்கில் பலர் போற்றும்படி பிரகாசிக்க வேண்டும் என்ற புகழ் ஆசை எல்லோருகும்
உள்ளது. அதற்காக அலைபாய்ந்து நேரத்தையும் தனது சக்தியையும் பணத்தையும் இழந்துவருகிறார்கள்.
மரத்தை வேட்ட தொடங்கும் முன்னர் நமது கோடாலியை திட்டிக்கொள்ள வேண்டும்.சாதிக்க நினைப்பவன்
புத்தியை திட்ட இந்த கட்டுரை சாணைக்கல்லாக இருக்கலாம்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு துகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப்பொருட்களும் ஏதோ ஒரு வகை கிளர்ச்சியை நமக்குள் ஏற்படுத்திக்கொண்டிருக்கும்.அந்த
தூண்டுதலினால் நமக்குள் சிந்தனை அல்லது செயல் வேகம் ஏற்படும் என்பது இயற்கை நியதி.
நாமும் இயற்கையின் ஒரு பாகம் என்பதால் நாமும் பிறர் மனதிலோ செயலிலோ மாற்றம் ஏற்படுத்தும் தூண்டுசக்தியாக இருக்க வேண்டும். அவ்வாறு உதிக்கும் எண்ணங்கள் செயல்படுத்தப்படாத உள்ளுணர்வாகவே நமக்குள் தேங்கிடும்போது, புதிய சிந்தனைகள் தோன்றுகையில் பழையன மறந்துவிடும், பிறகு மறந்துவிடும். எனவே எண்ணியவை எதுவானாலும் அதை அடுத்தவர் உணர்ந்துகொள்ளும் வடிவிலும் புரிந்துகொள்ளும் வகையிலும் நாம் நமது எண்ணங்களை எழுதியோ சொல்லியோ வெளிப்படுத்திவிட வேண்டும்.

நமக்குள் பல புதிய எண்ணங்கள் உருவாக வேண்டுமானால் அடுத்தவர்
பேசுவதையும் மற்றவர்களின் படைப்புகளையும் ஆர்வமுடன் கவனித்து உள்வாங்கும் மனப்பக்குவம்
நமக்கு வேண்டும். நம்மில் பலர் வெளிப்படுத்தமட்டும் முழுகவனமாக இருப்பார்கள் மற்றவர்
கருத்தையும் படைப்பையும் காது கொடுத்து கேட்கவோ கண்ணால் காணவோ விரும்புவதில்லை அப்படிப்பட்டவர்கள்
புதிய கருத்துக்கள் உள்வாங்க இயலாதவர்களாகி புதிய படைப்பையோ சிந்தனையோ அற்றவர்களாகி
விடுகின்றனர்.
பிறரிடமிருந்தும் நமது அனுபவத்தாலும் பெற்ற அறிவையும் அனுபவ
உணர்வுகளையும், நாம் நமக்கிருக்கும் திறமையோடு வடிவமைக்க நமக்குள் அந்த சிந்தனைகளை
அசை போடவேண்டும். நமது சிந்தனையில் தெளிவும் உறுதியும் ஏற்பட்ட பின்னர் அதை வெளிப்டுத்த
வேண்டும் நமக்கே ஐயப்பாடுடன் கருத்து தெளிவில்லாமல் இருக்கும் போது அதைப்பற்றி வெளியிடக்
கூடாது. தெளிவான கருத்துக்கோர்வை நமக்குள் உருவாகியப்பின்னரே நமது கருத்தை உறுதியாகவும்
தெளிவாகவும் வெளிப்படுத்த வேண்டும்.
குறைந்த நேரத்தில் அதிகமாக வெளிப்படுத்திட வேண்டும் என்ற ஆதங்கத்துடன்
பரபரப்புடன் செயல்படக்கூடாது. இது பேச்சாளருக்கு மட்டுமல்ல எழுத்தாளர் ஓவியர் போன்ற
அனைத்து படைப்பாளர்களுக்கும் பெருந்தும். என்னுடைய வழக்கம், எதை செய்தாலும் முதலில்
தெளிவாக அதற்கான திட்டத்தை மின் அஞ்சல் கடிதமாக என் நண்பருக்கு எழுதிவிடுவேன். அவர்
அதைப் படித்தப் பின்னர் நிறையவே குறைகள் குற்றங்கள் சொல்வார். அவருக்கு மறுப்போ பதிலோ
நான் சொல்வதில்லை.அவருடைய கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு என் பக்கம் புதுமாற்றங்கள்
செய்து பார்ப்பேன். அதனால் எனக்குள் புதிய
பக்குவம் ஏற்படுவதை உணர்கிறேன். நமது எண்ணங்களை ஒருமுறையாவது மற்றவர் படித்தால் புரியும்படி
எழுதிக்காட்ட வேண்டும்.அவர் கூறும் கருத்தை உள்வாங்கும் பக்குவத்தை பெற வேண்டும். பதட்டமும்
பரபரப்பும் இல்லாத மனம் இலகுவான நிலையில் உள்ளவர்களிடம், உறுதியான வெளிப்பாடும், ஆழமாக
உள்வாங்கிக்கொள்ளும் பக்குவமும் இருக்கும்.
பேசும் போதும் நமது பேசும்தொணி, குரல் அமைப்பு மாற்றங்களோடு நமது பேச்சு இருக்க வேண்டும்.எழுதுவதில்
எளியநடை மற்றும் சொற்கோர்வை வடிவமைப்பில் மாற்றங்கள் இருக்க வேண்டும்.
நமது கருத்தை திணிப்பதாகவோ அறிவுறுத்துவதாகவோ இல்லாமல் நமது
அடிப்படை எண்ணத்தை அடுத்தவர் சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் ஏற்படும் வகையில் நமது
கருத்தை விதைத்தோம் என்ற மனநிறைவோடு நாம் செய்தாகவேண்டும். அது மற்றவர் மூளையில் துளிர்க்கலாம்
அல்லது நிராகரிக்கப்படலாம். எதையும் ஏற்கும் உணர்வுடன் விளக்கம் தந்து முடிவுரை தரவேண்டும்
வெளிப்படுத்திய கருத்து நமதானாலும் அதை நம்மிடமிருந்து பெற்றவர்
அவர் பாணியில் வேறு இடத்தில் வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும்
சிலர் தான் உருவாக்கிய கருத்தினை அடுத்தவர் அதை உள்வாங்கி அவரது
வடிவில் வெளிப்படுத்துவதை விரும்புவதில்ல். அதில் தனக்கும் உரிமை கொண்டாடுவார். நாம்
ஒரு கருத்தை அல்லது படைப்பை சமூகத்தில் வெளிப்படுத்திவிட்டால் அதற்கு நாம் உரிமையாளரில்லை.அது
சமூகத்தின் பொது சொத்தாகிவிடும்.
இயற்கையின் படைப்பில் செடிகள் கொடிகள் மரங்கள் பூக்களையும் காய் கனிகளை தருகின்றன அவை அதில் உரிமை கொண்டாடுவதில்லை.அடுத்தநாள் மீண்டும் பூக்கின்றன காய்க்கின்ற.அதை பறித்த இன்னொரு மனிதன் அதை மாலையாக்கலாம் சாறாக்கலாம் உணவாக சமைக்கலாம் அதன் படைப்பாளிகள் இதில் உரிமை கோருவதில்லை.அடுத்ததடுத்த படைப்புகளை தந்துகொண்டே இருக்கின்றன.
நாம் வெளிப்படுத்திய கருத்திற்கு வேறு ஒருவர் என்ன மாதிரியான மறுமொழி வடிவம் தருகிறார்.அதற்கு என்ன கருத்து ஊட்டம் கிடைக்கிறது என்பதை கசப்பு இனிப்பு பாராமல் கவனித்து வரவேற்க வேண்டும். இவையே நம் மனதையும் அறிவையும் பக்குவப்படுத்தும். நாமும் சிந்தனையாலும் செயலாலும் மாற்றம் பெறுவோம்.அதன் பின்னர் நமது சிந்தனை அடுத்தகட்டத்திற்கு முன்னேறி புதிய படைப்பில் ஈடுபட வைக்கும்.

தாவரங்கள், உயிரினங்கள், இயற்கை படைப்புகளோடு நாமும் முன்னோக்கி
நகரும் மாற்றங்களை ஏற்படுத்துவோம் -------------கோ.சுரேந்திரபாபு சென்னை செல்பேசி
9444468670
அருமை வாழ்த்துகள்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete