ஆன்மீக
வாழ்க்கை முறையும் இயங்கியல் வாழ்க்கை முறையும்.
கோ.சுரேந்திரபாபு.
செல்பேசி 9444468670
உடல் நலம் காக்க நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்
என மருத்துவ அறிவுரை அளிக்கப்படுகிறது.அவ்வாறு நாம் உடற்பயிற்சியிலும் நடை பயிற்சியிலும்
ஈடுபடும்போது உடலின் நரம்புகளும் தசை நார்களும் இறுக்கத்திற்கு உள்ளாகிறது முறுக்கேறுகின்றன.
இந்த இயக்கத்தின்போது உடலில் வலியும் சிரமமும் இருக்கும் இதில் ஒரு இதமான சுகம் இருக்க
வேண்டும்..
உடற்பயிற்சிகள் செய்யும் போது உடலின் உறுப்புகளும் அதன் செல்களும்
அசைகின்றன, இதமாக இயக்கப்பட்டு மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இத்தகைய அசைவியக்க மாற்றம்தான்
உடற்கட்டு அமைப்பை நலமுடன் பாதுகாக்கிறது. என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. உடலின் உறுப்புகளும்
அதன் தசைநார்கள்,எலும்புகள் மற்றும் அதன் செல்கள் அசைவு எற்படுத்துவதால் மட்டுமே உடல்
நலமுடன் இருக்கும் என்பது சரியானதல்ல. அதில் தேய்மானம் மட்டும் நிகழும். உடல் இயக்கத்தில் விருப்பமும் மனநிறைவும் ஏற்படும் வகையில் உடலுறுப்புகள்
ஈடுபட வேண்டும்.உடல் மனம் மூளை ஆகிய மூன்றும் செர்ந்து இயங்கும்போது படைப்புகள் அல்லது
உற்பத்தி உருவாகிறது
மனமும் உடலும் சேர்ந்து இயக்கப்பட்டு ஒரு வெளிப்பாடு சிந்தனைப்படைப்பாக
(கதை கவிதை ஓவியம் இசை போன்ற படைப்புகள்) அல்லது பொருள் உற்பத்தியாகவோ இருக்க வேண்டும்.
விரல்களில் தூரிகையே பற்றிக்கொண்டு மனதில் உள்ள ஒரு உருவத்தின் செய்கையை ஓவியமாக தீட்டும்
ஓவியனுக்கு அதை செய்யும் போது மூளைத்திறனும், மனமும் உடலின் இயக்கமும் சேர்ந்து செயல்படுகிறது.
அதுவே மனக்குவிப்பு (CONCENTRATION) ஆகும்.
மனக்குவிப்பினால் வரும் நிதான இயக்கம், மனதையும் உடலையும் ஒருசேர
பயிற்சி அளிக்கிறது. இதில் சிக்கல் அல்லது சிரமம் ஏற்படலாம் சில தடைகளும் வலிகளும்
ஏற்படலாம் அதனை ஏற்று அந்த சுகமான வலியை மனம் மற்றும் உடல் ஒருசேர அனுபவிக்க வேண்டும்.
இதமான வலியுடன் கூடிய உழைப்பின் வெளிப்பாடாக ஒரு படைப்பை நாம் செய்து முடித்து இதை
பார்க்கும் போது தமக்குள் மனநிறைவு ஏற்படுகிறது.
நமது படைப்பை பிறர் பார்த்து அனுபவித்து பாராட்டும்போது அகமகிழ்வு கொள்கிறோம். நமது மனநிறைவும் பிறரால்
தரப்படும் அகமகிழ்வும் உடலின் உள்ளே இரத்தஓட்டமும் இரத்தப்பெருக்க இயக்கமும் ஊக்குவிக்கப்படுகிறது..
இதனால் உடலும் மனமும் இன்பத்தை அனுபவிக்கின்றன. இன்பம் துன்பம் இரண்டும் உடலின் உள்ளேயிருந்து
ஊற்றெடுக்கிறதா அல்லது உடலுக்கு வெளியே உருவாகி உள்வாங்கி அனுபவமாக நுகரப்படுகிறதா
? ஆன்மீகவாதிகள் அகமகிழ்வு என்பது உள்ளிருந்து ஊற்றெடுத்து மனதால் நுகரப்படுகிறது என்கிறார்கள். இயங்கியல்வாதிகள்
புறச்சூழலின் தாக்கத்தால்தான் மனிதன் இன்பம் துன்பம் அனைத்தையும் மனதாலும் உடலாலும்
அனுபவிக்கிறான் என்பார்கள்.
இந்தியாவில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு மதக்கோட்பாட்டின்
வழியை பின்பற்றியே வாழ்கிறார்கள். நாத்திகர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் கடவுள் வழிபாடு
மற்றும் கடவுள் பக்தி இல்லாமல் இருப்பார்கள் ஆனால் அவர்களும் வாழும் முறையில் மற்ற
மக்களோடு இணைந்து ஏதாவது ஒரு மதக்கோட்பாட்டை நடைமுறைப் படுத்திக் கொண்டே வாழ்கிறார்கள்.
ஆன்மீக வழியில் தியானப்பயிற்சி யோகா மற்றும் யோகாசனம் மட்டும்
செய்து உடல் உறுப்புகளை நலமுடன் பாதுகாக்கிறேன் என்று பலர் கூறுகிறார்கள். தியானம்
செய்யும் போது.புறச்சூழலில் ஏற்படும் அனைத்து விசைகளையும் மூளை உணராதபடி ஓர் அமைதி
நிலைக்கு மனம், மூளை உடல் வருத்திக்கொள்ளாமல் மிக நிதானமாக கொண்டு செல்கிறோம். தியான
நிலைக்கு போகும் போது ஐம்புலன்களும் உணரக்கூடிய புறவுலக இயக்க செயல்களின் பாதிப்பு
மனதிலோ மூளையிலோ உணராத அளவுக்கு அமைதி நிலை ஏற்படுத்த நம்மை நாமே பயிற்றுவிக்கிறோம்.
அந்த அமைதி நிலையை சாந்தி நிலை அல்லது சமாதி நிலை எனவும் கூறலாம்.
கடுமையாக உழைத்தவன் உடலை சாய்த்து உடலின் உறுப்புகளை தளர்த்தி
ஓய்வு பெறும் போது உடல் சுகம் காண்கிறது. அவனே ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது மூளையும் தளர்ச்சியை அனுபவித்து
ஓய்வு கொள்வதாக கருதுகிறோம். இத்தகைய ஓய்வும் தளர்வும் தருகின்ற இதமான சுகம் உடல் உழைப்பினால் ஒரு உற்பத்தி ஏற்படுத்தி அதனால் ஏற்படும் களைப்பிற்குப்
பின்னர் அனுபவிப்பதாகும்.
சமுதாயத்தில் எந்த படைப்போ உற்பத்தியோ தராத ஒருவன் தினமும் மனதிற்கும்
உடலுக்கும் தியானம் மற்றும் யோகப்பயிற்சிகளின் மூலம் முழு தளர்வும் ஓய்வும் கொடுப்பது
மனதாலும் உடலாலும் முழு சோம்பேறியாகி சும்மா
கிடந்து சோம்பல் முறிக்கிறான் என்று பொருள். இந்த சுகமான அனுபவம் இனிமையானதுதான்.கரடு
முரடான சாலையில் ஓட்டாமல் வீட்டிற்குள் நிறுத்தி வைத்த வண்டியை தினமும் துடைத்து எண்ணெய்
இட்டு சக்கரங்களை சுழற்றியும் இயக்கியும் பாதுகாப்பாக பராமரிப்பது போல் உடலின் உறுப்புகளை
இருந்த இடத்திலிருந்தே முரண்பாடுகள் முடிச்சுகள் எதையும் சந்திக்காமல் உடலையும் மனதையும்
பாதுகாத்துக்கொள்கிறார்கள். இவர்கள் சில வினாடிகள் அல்லது சில நிமிடங்கள் தினமும் பயிற்சி
செய்வதன் மூலம் மனதையும் உடலையும் தற்காலிக மரணத்தை அனுபவிக்க செய்கிறார்கள்..இவ்வாறு
ஐம்புலன்களை புற உலக இயக்கங்களிலிருந்து விடுவித்து மனதை தனிமைப்படுத்தி அமைதி (சொரணையற்ற)
நிலைக்கு பக்குவப்படுத்துவது ஆன்மீக பயிற்சி முறை ஆகும்.
அதற்கு மாறாக ஐம்புலன்களையும் உரிய அளவில் ஒரு சேர இயக்கி படைப்பு
அல்லது உற்பத்தியை ஏற்படுத்திக்கொடுப்பதில் மகிழ்வு காண்பது இயங்கியல் தத்துவ வாழ்வியலாகும்,தொழிலாளர்கள் கலைஞர்கள்
எழுத்தாளர்கள் இந்த வடிவில் வாழ்வியலை கடைபிடித்து உலகத்தை முன்நோக்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.மற்றவர்கள்
அந்த படைப்புகளை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் ஆவர்.
அறிந்வற்றில் சிலவற்றை எழுதுகிறேன்
கோ.சுரேந்திரபாபு சென்னை
செல் பேசி,9444468670 மின்னஞ்சல் friendsurender@gmail.com
புதிய கோணத்தில் உடற்பயிற்சி,யோகா,படைப்பு,உழைப்பு ஆகியவற்றை அலசியுள்ளீர்கள்.சிறப்பு.
ReplyDeleteஎனது புதிய கோணத்தில் உருவான சிந்தனையை கண்ணுற்ற தொழருக்கு நன்றி.இன்னும் பலர் தியானம் யோகா பற்றி பேசக்கூட விரும்புவதில்லை.
Deleteவிவாத்ததிற்குறிய பொருள். எளிமையாக விளக்கியுள்ளீர்கள். இதையே ஒரீரண்டு பகுதிகளாக சில உதாரணங்களோடு விளக்க வேண்டுகிறேன்.
ReplyDelete