Monday, 12 October 2015

அறுபதைக்கடந்தவன் அடைக் களம் தேடுகிறான்


அறுபதைக்கடந்தவன் அடைக் களம் தேடுகிறான்


இந்திய மண்ணில்
இளமை தொலைத்த
மூத்த குடிமகனின்
முத்திரைபதிக்கும் மௌனராகம்
இதய துடிப்பே இதனின் தாளம்.

எனக்கு நேரம் அதிகமாக இருக்கிறது ஆனால்
நேரம் எனக்கு வரவில்லை என்று
உதடுகள் உச்சரிக்கிறதே.
பரந்த உலகில் வாழ்கிறேன்
வரம்புகள் எனக்கில்லை.
வரையரைகள் எதுவுமில்லை
கட்டுப்பாடுகள் இல்லை
கடமைகளும் எனக்கில்லை
திறந்தவெளி பறவை போல்
தினங்களை கழிக்கிறேன்
நிமிடங்களை நகர்த்துகிறேன்

எனக்கான இடம் எது ?                                                                                                                                                                                                                                                                                 எனக்கு தெரியவில்லை.!
மனைவிக்கு கணவனாகி

பிள்ளைக்கு தகப்பனாக                                                                                       பள்ளிக்கூட வாசலில்
பகல் வெய்லில்
பலமணி நேரம்
வரிசையில் நின்றேன்                                                                                             பிள்ளைகளை படிக்க வைத்தேன்

எவனே வளமாய் வாழ
ஏதோ ஓர் அலுவலகத்தில்
அக்கரையோடு உழைத்தேன்
உறவுக்காக உழைப்பதும்
உரிமைக்காக போராடுவதும்
வலிமிகுந்த சுகம்தான்
அந்த வயதையும்
அனுபவித்துவிட்டேன்.

மகனுக்கு மணமகள் தேடினேன்
மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தேன்
மகனும் மருமகளும்
மகளும் மாப்பிள்ளையும்
மகிழ்வுடன் வாழ்ந்தமைக்கு
மாசற்ற பரிசாக
பேரனும் பேத்தியும்                                                                                                                   பார்த்தும் பேசியும் மகிழ்ந்தேன்
அவர்களின் சிறகுகளும்
ஆகாயத்தில் விரிந்த பின்னர்
ஆந்நியனாகி அனாதையானேன்.

இனி எனக்கான இடத்தை
எங்கே தேடுவேன்
எனக்கான புகலிடம் எதுவென
புரியா நிலையில்
புதைந்து பொனேன்

இனி இந்த வாழ்வில்
எனக்குரிய வேலை
எதுவென்று அறியேன்
என்றாலும்
தினமும் நான் வாழ்கிறேன்

திறந்த வெளிப்பறவைபோல                                                                                 சிறகுகள் வலிக்கிறது
திசைகளை தேடி கண்கள் வலிக்கிறது
இதயத்தின் வியர்வையால்
இரு விழிகளும் ஈரமாகிறது

பந்தலைத்தேடும் பூங்கொடி போல
முதுமைச் சுமையுடன்
மூச்சுக்காற்றில் ஓர் இராகம்
இதயத்தின் நாதமாக
எனக்குள் இன்றும் ஒலிக்கிறது

இன்னமும் நேரம்இருக்கிறது       
இளைஞர்களே உங்களோடுதான்                          
சமுதாய அரங்கில்                           
எனக்கும் களம் இருக்கிறது                             
 கூட்டணி அமைப்போம்                                          
வேகமாய் நீங்கள் 
விவேகமாய் நான்               
ஓன்றுபடுவோம் வா துணிவாய்                       
உலகத்தை  மாற்றிடுவோம்

கோ.சுரேந்திரபாபு,/சென்னை                                                                                           செல் பேசி 9444468670



4 comments:

  1. ஏக்கங்களை போக்கும் கடைசி வரிகள் முதியோர் செல்ல வேண்டிய திசையினை அருமையாக விளக்குகிறது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. முதுமையை மனம் உணர்ந்ததாய் தெரியவில்லை.அது எப்போதும் பால்ய நினைவுகளிலேயே வாழ்கிறது.கள்ளமில்லா குழந்தையாய் மாறி அனைத்தையும் அன்புடன் நேசிப்போம்.

    ReplyDelete
  4. முதுமையை மனம் உணர்ந்ததாய் தெரியவில்லை.அது எப்போதும் பால்ய நினைவுகளிலேயே வாழ்கிறது.கள்ளமில்லா குழந்தையாய் மாறி அனைத்தையும் அன்புடன் நேசிப்போம்.

    ReplyDelete